இராஜ் பி. ஷெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ் பி. ஷெட்டி
பிறப்பு5 சூலை 1987 (1987-07-05) (அகவை 36)
பத்ராவதி, கருநாடகம் , இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகர் • இயக்குநர் • திரைப்படத் தயாரிப்பாளர் • திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2015 –தற்போது வரை

இராஜ் பி. ஷெட்டி (Raj B. Shetty) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். முக்கியமாக இவர் கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். தான் இயக்குனராக அறிமுகமான ஒந்து மொட்டேய கதே (2017) படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றார். இது மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. குப்பி மேல பிரம்மாஸ்திரா (2019), மாயாபஜார் 2016 (2020) மற்றும் கன்னடத்தில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் கருட காமனா விருஷப வாகனா (2021) போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் இவரது பங்களிப்பு இருந்தது.[1] [2]

கன்னடத் திரைப்படத் துறையில் உள்ள எழுத்தாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி இவர் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.[3] நடிப்பைத் தவிர, இவர் தீவிர விலங்கு (நாய்) ஆர்வலர். இதன் காரணமாகவே 2022 இல் 777 சார்லி உருவானது.[4] பெரும் வெற்றிப் பெற்ற காந்தாரா திரைப்படத்தின் இறுதிப் பகுதிகளையும் இவர் இயக்கினார்.[5] தனது திரைப்படங்களில் ஒளிப்பதிவாளரும் மற்றும் படத் தொகுப்பாளருமான பிரவீன் சிரேயனுடன் அடிக்கடி இணைந்து பணியாற்றுகிறார்.[6] இவரது நடிப்பில் இயக்குநர் நடேஷ் ஹெக்டே இயக்கிய பெட்ரோ என்ற திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "How the egghead became a Sandalwood hero: Ondu Motteya Kathe's Raj B Shetty tells TNM". The news minute. 18 July 2017.
  2. "Garuda Gamana Vrishabha Vahana review: Riveting film is a breakthrough for Sandalwood". The News Minute (in ஆங்கிலம்). 2021-11-19. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.
  3. "Actor-director Raj Shetty yet again tears into Kannada film industry for 'not nurturing, encouraging growth of writers'". The Indian Express (in ஆங்கிலம்). 2023-07-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.
  4. "Raj B Shetty: I am a reluctant actor, but took up role in 777 Charlie because I am an animal lover". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.
  5. Rao, Subha J. (2022-10-10). "It is gratifying when your audience gets you: Rishab Shetty on Kantara". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.
  6. Service, Express News (2021-11-17). "The excitement of telling a good story drives me: GGVV DOP Praveen Shriyan". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.
  7. Service, Express News (2021-09-02). "Pedro the first Kannada film to premiere at Busan International Film Festival". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.
  8. Ramachandran, Naman (2022-10-09). "'Pedro' Filmmakers Natesh Hegde, Rishab Shetty Reteam for Busan APM Project 'Tiger's Pond'". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_பி._ஷெட்டி&oldid=3933549" இலிருந்து மீள்விக்கப்பட்டது