இராஜா கொரில் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜா கொரில் சிங்
தும்ரானின் ராஜா
ஆட்சிக்காலம்1709 கி.பி.-1746 கி.பி.[1]
பின்னையவர்இராஜா சதாதரி சிங்
இறப்பு1746
தும்ரான்
மரபுஉஜ்ஜெயினியா
மதம்இந்து

இராஜா கொரில் சிங் (Raja Horil Singh) என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் இந்திய மாநிலமான பீகாரில் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். மேலும் உஜ்ஜெனியா இராஜபுத்த்திரக் குலத்தைச் சேர்ந்தவராவார். இவர் மதிலாவில் ஆட்சி செய்தார். பின்னர் தும்ரான் சென்றார். [2] இவர் தனது சொந்த குலத்தினருடன் சண்டையில் ஈடுபடுவதிலும், முகலாயர்களின் கிளர்ச்சிகளைக் குறைக்க உதவுவதில் புகழ் பெற்றவராகவும் இருந்தார். அதற்காக இவருக்கு வெகுமதிகள் கிடைத்தது. 1734 இல் ஆப்கானிய படையெடுப்பாளர்களின் தோல்விக்கு உதவ சக ஜமீந்தார்களுடன் இவர் கூட்டணி வைத்தார். தும்ரான் இராச்சியத்தை நிறுவியர் என்பதும் ஒரு ஜமீந்தர் என்பதும் இவரது குறிப்பிடத்தக்க செயலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajiva Nain Prasad (1968). "The Role of Ujjainiya Rajputs in the Political History of Bihar". Proceedings of the Indian History Congress 30: 167–177. 
  2. R.N. Prasad (1969). "RAJA HORIL SINGH—THE UJJAINIYA CHIEF OF BHOJPUR (1708 A.D.— 1746 A.D.): Summary". Proceedings of the Indian History Congress 31: 203–204. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_கொரில்_சிங்&oldid=3032455" இலிருந்து மீள்விக்கப்பட்டது