இரவீந்திரா சதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திரா சதன்
Rabindra Sadan
இரவீந்திரா சதன், கோள்கொத்தா
அமைவிடம்கொல்கத்தா, இந்தியா
பொது போக்குவரத்துஇரவீந்திரா சதன் மெற்றோ நிலையம் (நீல வரிசை)
உரிமையாளர்மேற்கு வங்காள அரசு
இருக்கை எண்ணிக்கை1200 (இரவீந்திரா சதன் அரங்கம்)
பரப்பளவு4.5 Acres
Construction
திறக்கப்பட்டது1961 (1961)
சீரமைக்கப்பட்டது1999[1]
2016[2]

இரவீந்திரா சதன் (Rabindra Sadan) இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஒரு கலாச்சார மையம் மற்றும் நாடக வளாகமாகும். இது தெற்கு கொல்கத்தாவில் ஆச்சார்யா செகதீசு சந்திரபோசு சாலையில் அமைந்துள்ளது. வங்காள மொழி நாடகத்திற்கும் கொல்கத்தா திரைப்பட விழாவிற்கும் இது ஒரு பிரதான இடமாகும். இதன் பெரிய மேடைக்கு இம்மையம் குறிப்பிடத்தக்கதாகும். [3]

கொல்கத்தாவின் எக்சைடில் உள்ள இரவீந்திர சதனுக்குள் நுழையும் பார்வையாளர்கள்.

வரலாறு[தொகு]

1979 ஆம் ஆண்டு , இரவீந்திர சதனில் ஒரு கச்சேரியை மொகீனர் கோரகுலி நிகழ்த்தினார்

இரவீந்திரா சதனின் அடிக்கல் 1961 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று அப்போதைய இந்தியப் பிரதமர் சஜவகர்லால் நேருவால் நாட்டப்பட்டது. அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் அக்டோபர் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடைந்தன.[4] இரவீந்திரசதன் கட்டிடம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, 1913 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற முதல் இந்தியரான இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நூற்றாண்டு ஆண்டாகும். அரங்கம் 1999, 2016 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

அம்சங்கள்[தொகு]

இரவீந்திரா சதன் இரண்டு மாடிகளைக் கொண்டது. [5] இவ்வளாகத்தில் இப்போது இரவீந்திர சதன் மேடை, நந்தன் திரைப்பட மையம், பசுசிம்பங்கா பங்களா அகாடமி, எனப்படும் வங்காள மொழி அகாதமி, ககனேந்திர பிரதர்சன்சாலா, சிசிர் மஞ்சா, நசுருல் அகாடமி போன்றவை கலாச்சார நடவடிக்கைகளின் மையங்களாக உள்ளன. இரவீந்திரா சதன் அரங்கத்தில் சுமார் 1200 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "STATE-OWNED AUDITORIUM RATES RAISED". www.telegraphindia.com.
  2. "Rabindra Sadan makeover gets 90-day deadline". 17 February 2015 – via The Economic Times - The Times of India.
  3. PTI (9 May 2010). "Tributes to Tagore on his 150th birth centenary". DNA. https://www.dnaindia.com/india/report-tributes-to-tagore-on-his-150th-birth-centenary-1380888. 
  4. "Rabindra Sadan" (PDF). Tathya Bangla. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  5. "Seagull Empire at Rabindra Sadan, Calcutta". Red Bull.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திரா_சதன்&oldid=3737050" இலிருந்து மீள்விக்கப்பட்டது