இரவி சங்கர் பிரசாத்
இரவி சங்கர் பிரசாத் | |
---|---|
![]() | |
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 26 மே 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | கபில் சிபல் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 30 ஆகத்து 1954 பட்னா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மாயா சங்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பட்னா பல்கலைக்கழகம் |
சமயம் | இந்து சமயம் |
ரவி சங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad, ஆகத்து 30, 1954) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையிலும் மற்றும் 2019 இரண்டாம் அமைச்சரவையிலும் சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக உள்ளார்.[1][2][3][4][5] மாநிலங்களவை உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களில் ஒருவர்.
2001இல் வாஜ்பாய் தலைமையிலான தேஜகூ அரசில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.[6] பா. ஜ. க தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here" (en).
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
- ↑ "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்த்த நாள் 4 சூன் 2014.
- ↑ "Shri Ravi Shankar Prasad assumes charge of the Law & Justice Ministry". India: Press Information Bureau. மூல முகவரியிலிருந்து 1 June 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 June 2014.
- ↑ "Ravi Shankar Prasad set to become BJP deputy leader in RS". PTI. The Times of India. 2012-07-19. http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745818_1_parliamentary-party-ravi-shankar-prasad-rajya-sabha-arun-jaitley. பார்த்த நாள்: 2013-08-28.
- இந்திய அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்
- 1954 பிறப்புகள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
- பதினேழாவது மக்களவை அமைச்சர்கள்
- இந்திய அமைச்சர்கள்
- பீகார் அரசியல்வாதிகள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்