உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்ன ராம் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்ன ராம் சவுத்ரி
Ratna Ram Chaudhary
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
1977–1985
முன்னையவர்பாக்ராச் சவுத்ரி
பின்னவர்அர்ச்சுனண் சிங் தியோரா
தொகுதிஇராணிவரா
பதவியில்
1990–1993
முன்னையவர்அர்ச்சுனண் சிங் தியோரா
பின்னவர்அர்ச்சுனண் சிங் தியோரா
தொகுதிஇராணிவரா
பதவியில்
1998–2003
முன்னையவர்அர்ச்சுனண் சிங் தியோரா
பின்னவர்Arjun Singh Deora
தொகுதிஇராணிவரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1929
இறப்பு28 நவம்பர் 2019 (வயது 90)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இரத்ன ராம் சவுத்ரி (Ratna Ram Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். இராசத்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு உருவான பஞ்சாயத்து ராச் அமைப்பில் 1959ஆம் ஆண்டு முதல் முறையாக இரத்ன ராம் சவுத்ரி சர்பஞ்சாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு, 22 ஆண்டுகள் தொடர்ந்து தோற்கடிக்க முடியாத சர்பஞ்சாக இருந்த இவர், 1977 ஆம் ஆண்டில் முதன்முறையாக காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 1980, 1990, 1998 ஆகிய ஆண்டுகளிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [3][4]

இரத்ன ராம் சவுத்ரி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று தனது 90 ஆவது வயதில் காலமானார்.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan Assembly Election Results in 1977". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  2. "Rajasthan Assembly Election Results in 1980". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  3. "Rajasthan Assembly Election Results in 1990". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  4. "Rajasthan Assembly Election Results in 1998". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  5. "रानीवाड़ा में राजनीति का एक अध्याय समाप्त, पूर्व विधायक रतनाराम चौधरी का निधन". Rajasthan Patrika (in இந்தி). 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
  6. "पूर्व विधायक रतनाराम चौधरी का निधन". First India News (in இந்தி). 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்ன_ராம்_சவுத்ரி&oldid=4131475" இலிருந்து மீள்விக்கப்பட்டது