இரஞ்சித் சிங் (தடகள வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித்து சிங்
Ranjit Singh
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு25 நவம்பர் 1957 (1957-11-25) (அகவை 66)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடைப்போட்டி

இரஞ்சித் சிங் (Ranjit Singh (athlete)) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் நாளன்று வடமேற்கு இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஆனந்த்புர் சாகிப் மாவட்டம் இயிந்துவாரி கிராமத்தில் இவர் பிறந்தார்.

1977 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தின் மகர் படைப்பிரிவில் பணியாற்றினார். இந்திய நடைப்பந்தய வீரரான இவர் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் பங்கேற்று 80 பங்கேற்பாளர்களில் 18 ஆவது இடத்தைப் பிடித்தார்.[1]

1981 ஆம் ஆண்டு சப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் இரஞ்சித்து சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய இராணுவத்தில் மூன்று முறை தேசிய வெற்றியாளராகவும் திகழ்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ranjit Singh Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 2 December 2017.