உள்ளடக்கத்துக்குச் செல்

இரங்கன் சட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரங்கன் சாட்டர்ஜி
பிறப்புமன்செஸ்டர், இங்கிலாந்து
கல்விஎடின்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி
பணி
  • மருத்தவும்
  • எழுத்தாளர்
  • ஒலிபரப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 (2001)–தற்போது வரை
தொலைக்காட்சிடாக்டர் இன் தி ஹவுஸ்(தொலைக்காட்சித் தொடர்)
பெற்றோர்தருண் சாட்டர்ஜி (தந்தை)
பிள்ளைகள்2
வலைத்தளம்
drchatterjee.com

இரங்கன் சாட்டர்ஜி (Rangan Chatterjee) ஒரு பிரித்தானிய மருத்துவரும், எழுத்தாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் மற்றும் வலையொலி ஒலிபரப்பாளரும் ஆவார். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியான டாக்டர் இன் ஹவுஸிற்காகவும், பிபிசி காலை உணவில் தொடர்ந்து இடம் பெறும் மருத்துவராகவும், பிபிசி வானொலியில் தொடர்ந்து பங்களிப்பவராகவும் பிரபலமானவர் ஆவார்.[1]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

சாட்டர்ஜியின் தந்தை தருண் சாட்டர்ஜி, 1960 களில் இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து மான்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் மரபணு-சிறுநீர் மருத்துவத்தில் ஆலோசகராக இருந்தார்.[2] சாட்டர்ஜி 1988 முதல் 1995 வரை மான்செஸ்டர் இலக்கணப் பள்ளியில் மாணவராக இருந்தார்; பின்னர் இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் மருத்துவம் பயின்றார். 2001-ஆம் ஆண்டில் நோயெதிர்ப்புத் துறையில் கூடுதல் பட்டம் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

சாட்டர்ஜி "ஃபீல் பெட்டர், லிவ் மோர்" என்ற வலையொலி ஒலிபரப்பைத் தொகுத்து வழங்குகிறார், மேலும் பிபிசி ரேடியோவில் வழக்கமான வர்ணனையாளராக தோன்றினார்.

குடும்பம்

[தொகு]

சட்டர்ஜி விதாதா என்ற வழக்கறிஞரை மணந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lambert, Victoria (June 2017). "The Resident doctor on BBC One's Breakfast Show.". The Telegraph. https://www.telegraph.co.uk/health-fitness/body/bbcs-dr-chatterjee-my-babys-illness-changed-the-way-i-work/. 
  2. "Dr. Rangan's father".
  3. "The Manchester Grammar School".
  4. Relative Values: the BBC’s Dr Rangan Chatterjee and his wife, Vidhaata thetimes.co.uk. Retrieved 16 November 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கன்_சட்டர்ஜி&oldid=3924646" இலிருந்து மீள்விக்கப்பட்டது