இயும்லேம்பம் கம்பினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயும்லெம்பம் கம்பினி தேவி (பிறப்பு: 1945 சனவரி 1) இந்தியாவைச் சேர்ந்த நடா சங்கீர்த்தனாவின் பாடகியும், மணிப்பூரி நடனக் கலைஞரும் ஆவார்.[1] இவர் ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாதமியின் (ஜே.என்.எம்.டி.ஏ) ஆசிரிய உறுப்பினராவார்.[2] மேலும் இவர் 1988 ஆம் ஆண்டில் நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[3] மணிப்பூரி நடனம் மற்றும் இசையில் இவரின் பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இந்திய குடியரசின் நான்காவது உயரிய சிவில் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[4]

வாழ்க்கை[தொகு]

காம்பினி தேவி 1945 ஆம் ஆண்டில் ஆங்கில புதுவருட பிறப்பன்று வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள யெய்ச்குல் ஹிருஹான்பா லெய்காயில் நடா சங்கீர்த்தனா கலைஞரான வை. குலப் சிங்கிற்கு எட்டு குழந்தைகளில் நான்காவதாக பிறந்தார்.[5] காம்பினி தேவி தனது 5 வயதில் இசை மற்றும் நடனம் கற்கத் தொடங்கினார். பின்னர், ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாடமியில் (ஜே.என்.எம்.டி.ஏ) இணைந்தார். அங்கு மணிப்பூரி நடனத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றார்.

இவர் ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாதமியில் பிரபலமான ஆசிரியர்களான அமுடோன் சர்மா, மைஸ்னம் அமுபி சிங் , கைதெம் லோகேஷர் சிங், க்ஷேத்ரிதாம்பி தேவி, நங்கோம் ஜோகேந்திர சிங் மற்றும் இபோபிஷாக் சர்மா போன்றவர்களிடமிருந்து மணிப்பூரி நடனத்திலும் மற்றும் நோங்மைதேம் டோம்பா சிங், காண்டா மொய்னா டான், நங்காங்கோம், தோச்சோம் கோபால் சிங் (மோனோஹர்சாய் கீர்த்தன்) ஆகிய ஆசிரியர்களிடம் இருந்து இசையிலும் பயிற்சி பெற்றார்.[1]

கம்பினி தேவி தனது ஏழாவது வயதில் மேடைகளில் நடிக்கத் தொடங்கினார். இவர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு மேடைகளில் நடித்துள்ளார். கற்பித்தல் பணியை தாம் பயின்ற கல்விச்சாலையில் தொடங்கிய கம்பினி தேவி அங்கு 2005 ஆம் ஆண்டில் தாம் ஓய்வுப் பெறும் வரை ஆசிரிய உறுப்பினராக பணியாற்றினார்.[5] அகாடமியில் வருகை ஆசிரியராக பணிபுரிந்தவாரே அகில இந்திய வானொலியின் இம்பால் நிலையத்தில் பணியாற்றினார். கம்பினி தேவி மாநிலத்தின் சிறந்த முதல்தர பெண் கலைஞராக கருதப்படுகின்றார்.[1] இவர் ஒய்.ஜி.ஆர் நாட் சங்கீர்த்தனா ஷீடம் ஷாங்க் என்ற இசை பயிற்சி நிறுவனத்தையும் நிறுவினார். [5]மேலும் இவர் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் இந்திய தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான தூர்தர்ஷனின் மத்திய நடன ஆடிஷன் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவரது பாடல்கள் இரண்டு இசைத் தொகுப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் பாசக் பாடல்களில் பாசக் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.[6]

விருதுகள்[தொகு]

மணிப்பூரி சாகித்ய பரிஷத் 1979 ஆம் ஆண்டில் தேவிக்கு நிருத்ய ரத்னா விருதை வழங்கியது. மேலும் இவர் 1980 இல் மணிப்பூர் மாநில கலா அகாடமியிலிருந்து நாட் சங்கீத் விருதைப் பெற்றார்.[5] 1988 ஆம் ஆண்டில் நடா சங்கீர்த்தனுக்கான சங்க நாடக அகாடமி விருது இவருக்கு கிடைத்தது.[3] அதே ஆண்டில் அவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கலாச்சாரத் துறையால் மூத்த பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கம்பினி தேவிக்கு இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[4]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]