இயாங் இரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயாங் இரென் (Hiyang hiren) என்பது பாரம்பரியமாக மணிப்பூர் அரச குலத்தவர்கள் பயன்படுத்திய ஒரு வகை பந்தயப் படகாகும். மணிப்பூரி மக்கள் கொண்டாடும் இலை அரோபா எனப்படும் மதத் திருவிழாவில் இயாங் தன்னாபா என்ற படகுப் பந்தய விழாவில் இப்படகு பயன்படுத்தப்படுகிறது.[1][2] பொதுவாக நவம்பர் மாதத்தில் இயாங் தன்னாபா என்ற படகுப் பந்தய விழா நடைபெறும். படகோட்டிகள் பாரம்பரிய உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து இப்போட்டியில் பங்கேற்கின்றனர் இயற்கை சீற்றத்தின் போது கூட இந்த விளையாட்டு கைவிடப்படாமல் நடத்தப்படுகிறது.

இயாங் இரென் படகு ஆன்மீக சக்திகளுடன் முதலீடு செய்யப்பட்டதாகவும் மத சடங்குகளுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.[3] மெய்தேய் எனப்படும் மணிப்பூர் மாநில மக்கள் இப்படகை வழிபடுவதால் தீமைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.[3] இயாங் இரென் படகானது சங்காய் மான்களின் செயற்கை தலை போல முன்புறத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. படகு சுமார் 54 அடி நீளம் கொண்டது. படகுப் பந்தய விழா ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.[4] மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தில் இயான் இரென் வகை பந்தயப் படகு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயாங்_இரென்&oldid=3661085" இலிருந்து மீள்விக்கப்பட்டது