இப்பாக்சி
இப்பாக்சி அல்லது எப்பாக்சி என்பது ஒரு வெப்பமிறுக்குப் பல்பகுதியம் ஆகும். இது ஒரு இப்பாக்சைடுப் பிசின் பாலியமைன் வன்மையாக்கியுடன் தாக்கமுறுவதன் விளைவாக உருவாகின்றது. இப்பாக்சி பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டது. இழை வலுவூட்டிய நெகிழிப் பொருட்கள், பொதுத் தேவைகளுக்கான ஒட்டும் பொருட்கள் போன்ற பல பொருட்களின் உற்பத்தியில் இது பயன்படுகின்றது.
வேதியியல்
[தொகு]இப்பாக்சி இரண்டு வேதிச் சேர்வைகளால் ஆன ஒரு இணைப்பல்பகுதியம். இவற்றுள் ஒன்று "பிசின்" எனவும் மற்றது "வன்மையாக்கி" எனவும் குறிக்கப்படுகின்றன. பிசின் ஒரு ஒருபகுதியத்தையோ இரு முனைகளிலும் இப்பாக்சைடுத் தொகுதியோடு கூடிய குறுகிய சங்கிலி கொண்ட பல்பகுதியத்தையோ கொண்டிருக்கும். மிகப் பொதுவான இப்பாக்சிப் பிசின்கள் எப்பிக்குளோரோவைதரின், பைஸ்பீனோல்-ஏ ஆகிவற்றைத் தாக்கமுறச் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன. வன்மையாக்கிகள், டிரைஎத்திலீன்டெட்ராமைன் போன்ற பாலியமைன் ஒருபகுதியங்களைக் கொண்டிருக்கும். இச் சேர்வைகளைக் கலக்கும்போது இரண்டும் தாக்கமுற்று இணைவலுப்பிணைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு NH கூட்டமும் ஒரு இப்பாக்சைடுக் கூட்டத்துடன் தாக்கமுற்று உருவாகும் பல்பகுதியம் பெருமளவு குறுக்குப்பிணைப்புகளைக் கொண்டிருப்பதனால் அது உறுதியானதாகவும், வலுவானதாகவும் அமைகின்றது.
வெளியிணைப்புகள்
[தொகு]- எப்பாக்சியினால் ஏற்படும் உடல்நலத் தீங்குகள் பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம் (கலிபோர்னிய உடல்நலச் சேவைத்துறை) (ஆங்கில மொழியில்)
- எப்பாக்சியின் வேதியியல், (ஆங்கில மொழியில்)