இபின் கோர்தாத்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபின் கோர்தாத்பே
பிறப்புகி.பி.820/825
குராசான், அப்பாசியக் கலீபகம்
இறப்புகி.பி 913
குறிப்பிடத்தக்க படைப்புகள்புக் ஆப் ரோட்ஸ் அன்ட் கிங்டம்
குடும்பத்தினர்அப்தல்லா இபின் கோர்த்தாத்பே (தந்தை)

அபுல்-காசிம் உபைதல்லா இபின் அப்துல்லா இப்னு கோர்தாத்பே ( Abu'l-Qasim Ubaydallah ibn Abdallah ibn Khordadbeh) ( கி.பி.820/825 – 913), பொதுவாக இபின் கோர்தாத்பே ( Ibn Khurradadhbih என்றும் உச்சரிக்கப்படுகிறது ), அப்பாசியக் கலீபகத்தில்[1] பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த[2] உயர் பதவியில் இருந்த அதிகாரியும் மற்றும் புவியியலாளரும் ஆவார். இவர் நிர்வாக புவியியல் பற்றிய ஆரம்பகால அரபு புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். [3]

சுயசரிதை[தொகு]

இபின் கோர்தாத்பே அப்துல்லா இபின் கோர்தாத்பேயின் மகன் ஆவார். இவரது தந்தை அப்பாசிய கலீபா அல்-மாமூனின் (ஆட்சி. 813-833), கீழ் தபரிஸ்தானின் வடக்கு ஈரானியப் பகுதியை ஆட்சி செய்தவர் . மேலும், அவர் 816/17 இல் அண்டை பகுதியான தைலத்தை கைப்பற்றினார். அத்துடன் பவந்திட் இசுபாபாத் முதலாம் சாக்ரியாரை ( ஆ. 817–825 ) தபரிஸ்தானின் மலைப்பகுதிகளில் இருந்து விரட்டியடித்தார். இபின் கோர்தாத்பே கி.பி. 820 அல்லது 825 இல் குராசானின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தார், ஆனால் பாக்தாத் நகரில் வளர்ந்தார்.[3][4] அங்கு இவர் பாரம்பரியக் கல்வியைப் பெற்றார். மேலும் தனது தந்தையின் நண்பரான பிரபல பாடகர் இசாக் அல்-மவ்சிலியிடம் இசை பயின்றார். இபின் கோர்தாத்பே பெரியவரானபோது மத்திய மாகாணமான சிபாலிலும், இறுதியில் சாமர்ரா மற்றும் பாக்தாத்தில் கலீபகத்தின் அஞ்சல் மற்றும் உளவுத்துறையில் நியமிக்கப்பட்டார். [3]

அப்பாசியக் கலீபகம் அண். 850

படைப்புகள்[தொகு]

கோர்தாத்பே , "விளக்க புவியியல்" ( கிதாப் அல் மசாலிக் வால் மாமாலிக் ), "இசையைக் கேட்பதற்கான ஆசாரம்", "பாரசீக மரபியல்", சமையல்", "குடிப்பழக்கம்", " நிழலிடா வடிவங்கள்", "வரம்-தோழர்கள்", "உலக வரலாறு", "இசை மற்றும் இசைக்கருவிகள்" போன்ற பல தலைப்புகளில் சுமார் 8-9 புத்தகங்களை எழுதினார். இசை பற்றிய புத்தகத்திற்கு கிதாப் அல்-லாவ் வ-ல்-மலாஹி என்ற தலைப்பு இருந்தது. இது இஸ்லாமியத்திற்கு முந்தைய ஈரானின் இசையைப் பற்றியது.[3][5]

சுமார் 870 இபின் கோர்தாத்பே கிதாப் அல் மசாலிக் வால் மாமாலிக் ( சாலைகள் மற்றும் ராச்சியங்களின் புத்தகம் ) என்ற நூலை எழுதினார் (புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 885 இல் வெளியிடப்பட்டது). [6] இந்தப் படைப்பில், அப்பாசிக கலீபகத்தின் பல்வேறு மக்கள் மற்றும் மாகாணங்களைப் பற்றி விவரித்துள்ளார். பிரம்மபுத்ரா, அந்தமான் தீவுகள், தீபகற்ப மலேசியா மற்றும் சாவகம் வரையிலான தெற்கு ஆசியக் கடற்கரையின் நிலம், மக்கள் மற்றும் கலாச்சாரம் பற்றிய விளக்கங்கள் உட்பட வரைபடங்களும் புத்தகத்தில் உள்ளன.[7]:108

தாங் சீனா, ஒருங்கிணைந்த சில்லா (கொரியா) மற்றும் யப்பான் ஆகிய நாடுகளின் நிலங்களும் இவரது படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிழக்கில் வைக்கிங் வர்த்தகத்தை பதிவு செய்த ஆரம்பகால முஸ்லிம் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.[8] அந்த காலத்தில் ' ரஸ்' எனப்படும் வணிகர்கள் கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடலில் வர்த்தகம் செய்தனர். பாக்தாத் வரை ஒட்டகங்கள் மூலம் தங்கள் பொருட்களைக் கொண்டு சென்றனர்.[9]

வக்வாக் தீவு[தொகு]

இபின் கோர்தாத்பே, சீனக் கடலில் அமைந்துள்ள வக்வாக் தீவைப்பற்றி இரண்டு முறை குறிப்பிடுகிறார்:

“சீனாவின் கிழக்கே வக்வாக் நிலங்கள் உள்ளன. அவை தங்கத்தால் நிறைந்தவை. மக்கள் தங்கள் நாய்களுக்கான சங்கிலிகளையும் குரங்குகளுக்கு க்ழுத்துப் பட்டைகளையும் இந்த உலோகத்தால் செய்கிறார்கள். அவர்கள் தங்கத்தால் நெய்யப்பட்ட துணிகளை உற்பத்தி செய்கிறார்கள். சிறந்த கருங்காலி மரம் அங்கு காணப்படுகிறது. வக்வாக்கில் இருந்து தங்கம் மற்றும் கருங்காலி ஏற்றுமதி செய்யப்படுகிறது”.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GEOGRAPHY iv. Cartography of Persia – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24. Ebn Ḵordādbeh (fl. 9th cent., q.v.), one of the earliest Persian geographers, produced in 846 his major work Ketāb al-masālek wa'l mamālek, which is considered the foundation for the later Balḵī school of geography
  2. van Arendonk, C. (2012-04-24), "Ibn K̲h̲ordād̲h̲beh", Encyclopaedia of Islam, First Edition (1913-1936) (in ஆங்கிலம்), Brill, பார்க்கப்பட்ட நாள் 2023-07-31, Abu 'l-Ḳāsim ʿUbaid Allāh b. ʿAbd Allāh, an important geographer of Persian descent who was apparently born in the early years of the third century a. h. (c. 820).
  3. 3.0 3.1 3.2 3.3 Bosworth 1997, ப. 37–38.
  4. Meri 2005, ப. 360.
  5. Meri 2005, ப. 359–360.
  6. Hee-Soo, Lee, Early Korea-Arabic Maritime Relations Based on Muslim Sources, Korea Journal 31(2) (1991), p. 26 {{citation}}: Missing or empty |title= (help)
  7. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  8. Isabella Bird (9 January 2014). "1". Korea and Her Neighbours.: A Narrative of Travel, with an Account of the Recent Vicissitudes and Present Position of the Country. With a Preface by Sir Walter C. Hillier.. Adegi Graphics LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-543-01434-4. https://books.google.com/books?id=hHeKAgAAQBAJ. 
  9. Christys, Ann (27 August 2015). Vikings in Spain. Bloomsbury. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781474213752. 
  10. "Saudi Aramco World : The Seas of Sindbad".

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இபின்_கோர்தாத்பே&oldid=3868254" இலிருந்து மீள்விக்கப்பட்டது