இன்புளூயன்சா கண்டறியும் விரைவுச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்புளூயன்சா கண்டறியும் விரைவு சோதனை (Rapid influenza diagnostic test) நியூக்ளியோபுரோட்டின் எனப்படும் உட்கருப் புரத எதிர்ப்பூக்கியை கண்டறிவதன் மூலம் ஒரு நபருக்கு இன்புளூயன்சா தொற்று உள்ளதா என்பதை விரைவாகக் கூறுகிறது. வணிக ரீதியாக கிடைக்கும் இன்புளூயன்சா கண்டறியும் விரைவு சோதனை கருவிகளால் 30 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்க முடியும். இந்த முடிவுகளை வண்ண மாற்றம் அல்லது பிற காட்சி சமிக்ஞைகள் மூலம் கவனிக்க முடியும்.[1][2] மருத்துவர்களுக்கு, இன்புளூயன்சா கண்டறியும் விரைவு சோதனைகள் மருத்துவர்களுக்கு முதல்-வரிசை சோதனையாக செயல்படுகின்றன. இம்முடிவுகள் பின்னர் (குறிப்பாக எதிர்மறையாக இருந்தால்) பாரம்பரிய நோயறிதல் சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு வைரசு தடுப்பு சிகிச்சையை உடனடியாகத் தொடங்கவும், பயனுள்ள தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்கவும், மற்றும் நோயறிதல் விசாரணைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் மருத்துவர்களை அனுமதிக்கின்றன.[3][4] இன்புளூயன்சா கண்டறியும் விரைவு சோதனைகள் மூடிய சுற்றுப்பாதை பராமரிப்பு அமைப்புகளில் மார்பு ஊடுகதிர்ப்படவியலையும் இரத்தப் பரிசோதனையையும் குறைக்கின்றன. ஆனால் நுண்ணுயிர்கொல்லி பரிந்துரைக்கப்படவில்லை, அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில் நேரத்தையும் பரிந்துரைக்கவில்லை.[5]

ஓர் ஆய்வின்படி, எச்1என்1 விரைவுப் பரிசோதனையில் 66% உணர்திறன் இருந்தாலும் , எச்1என்1 உட்கருப் புரதத்தைக் கண்டறிவதில் 34% தவறான-எதிர்மறை முடிவுகள் கிடைத்தன.[6]

மாதிரி சேகரித்தல்[தொகு]

மாதிரியைப் பெறப் பயன்படுத்தப்படும் சேகரிப்பு நுட்பத்தைப் பொறுத்ததாகவே இன்புளூயன்சா கண்டறியும் விரைவு சோதனையின் துல்லியம் அமைந்துள்ளது. தொண்டை, மூக்கு மற்றும் மூக்குத்தொண்டைப் பாதை சுரப்புகள், குரல்வளை கழிவுகள் முதலியன் இச்சோதனைகளுக்கான மாதிரிகளாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Current Approaches for Diagnosis of Influenza Virus Infections in Humans". Viruses 8 (4): 96. April 2016. doi:10.3390/v8040096. பப்மெட்:27077877. 
  2. "Rapid Influenza Diagnostic Tests | Seasonal Influenza (Flu) | CDC". www.cdc.gov. 2017-04-07. பார்க்கப்பட்ட நாள் 2018-09-08.
  3. "Accuracy of Rapid Influenza Diagnostic Tests: A Meta Analysis". www.annals.org. 2012-04-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
  4. "How accurate are rapid influenza diagnostic tests?". Expert Review of Anti-Infective Therapy 10 (6): 615–7. June 2012. doi:10.1586/eri.12.49. பப்மெட்:22734950. 
  5. Lee, Joseph J; Verbakel, Jan Y; Goyder, Clare R; Ananthakumar, Thanusha; Tan, Pui San; Turner, Phillip J; Hayward, Gail; Van den Bruel, Ann (4 October 2018). "The clinical utility of point-of-care tests for influenza in ambulatory care: A systematic review and meta-analysis". Clinical Infectious Diseases 69 (1): 24–33. doi:10.1093/cid/ciy837. பப்மெட்:30285232. 
  6. "Rapid influenza antigen test for diagnosis of pandemic (H1N1) 2009". Emerging Infectious Diseases 16 (5): 824–6. May 2010. doi:10.3201/eid1605.091797. பப்மெட்:20409373. 
  7. "Use of Influenza Rapid Diagnostic Tests" (PDF). Special Programme for Research and Training in Tropical Diseases. World Health Organization. 2010.