இந்தோர் மராத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோர் மராத்தான், 2010

இந்தோர் மராத்தான் (Indore Marathon) என்பது இந்தூர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மாரத்தான் போட்டியாகும். இந்தூர் மாநகராட்சி நிறுவனம் இப்போட்டியை நடத்துகிறது. ரிலையன்சு கியோ இப்போட்டிக்கான நிதியுதவியை வழங்கி அதன் முதன்மை புரவலராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தூரில் இருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் இங்கு வந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்கிறார்கள் [1][2][3][4][5][6][7]. 2015 ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. "ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான இந்தோர்" என்ற தொலை நோக்கத்துடன் இப்போட்டி தொடங்கப்பட்டது.

அரை மாரத்தான்[தொகு]

நேரு விளையாட்டு அரங்கத்தின் வெளிப்புறத்தில் தொடங்கி கீதாபவன், பலாசியா, விசய் நகர் வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தில் வந்து முடியும் 21 கிலோமீட்டர் தொலைவு ஓட்டம், அரை மாரத்தான் போட்டி என்றழைக்கப்படுகிறது.

10 கிலோமீட்டர் மாரத்தான்[தொகு]

நேரு விளையாட்டு அரங்கத்தின் வெளிப்புறத்தில் தொடங்கி கீதாபவன், பலாசியா, பரதேசிபுரா வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தில் வந்து முடியும் 10 கிலோமீட்டர் தொலைவு ஓட்டமானது 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி என்றழைக்கப்படுகிறது.

பரிசுத் தொகை[தொகு]

அரை மாரத்தான் போட்டியின் அனைத்துலக ஆண்/பெண் வெற்றியாளர் ஒவ்வொருக்கும் ரூ. 50,000 பரிசும் 10 கிமீ மராத்தனுக்கான அனைத்துலக ஆண்/பெண் வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும் ரூ 30,000 பரிசும் இங்கு வழங்கப்படுகிறது. 5 கிமீ மராத்தனுக்கான பரிசுப் பணம் ஏதும் வழங்கப்படுவது இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோர்_மராத்தான்&oldid=3850773" இலிருந்து மீள்விக்கப்பட்டது