உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகம் (Indonesia World Records Museum) அல்லது MURI என்பது இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் செமராங் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்தோனேசிய ஆவணங்களின் தொகுப்புகளைக் கொண்ட ஒரு வங்கி அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 27 சனவரி 1990 ஆம் நாளன்று ஜெயா சுப்ராணா என்பவரால் அமைக்கப்பட்டது. சூலை 2005 வரை இந்த அருங்காட்சியகத்தில் 1200 ஆவணங்கள் உள்ளன.

அமைவிடம்

[தொகு]

இந்தோனேசியாவில் வசிக்கின்ற பெரும்பாலான அனைத்து எல்லா மக்களுக்கும் “முரி” (“MURI”) என்ற சொல் தெரிந்திருக்கும். சுருக்கமாகக் கூறின், இது இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகத்தின் பெயராக அமைந்துள்ளது. பெயரில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்த அருங்காட்சியகம் தேசிய மற்றும் உலகளவிலான ஆவணப் பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அது அவற்றை பல்வேறு பிரிவுகளில் சேமித்து வைத்துள்ளது. விடுமுறை நாட்களில் அந்த பதிவுகள் தொடர்பான தகவல்களைக் கண்டுபிடிப்பது சற்றே வேடிக்கையாக இருக்கும். இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள இடத்தைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகம் ஸ்ரோண்டோல் குலோன் கிராமத்தில் உள்ளது. அந்தக் கிராமமானது பன்யுமனிக் துணை மாவட்டத்திற்கு சொந்தமான கிராமமாகும். அருங்காட்சியகம் வசிக்கும் பெரிண்டிஸ் கெமர்டேகான் தெருவுக்குச் சென்றுதான் சுற்றுலாப் பயணிகள் இந்த அருங்காட்சியகத்தை அடைய முடியும். ஏனென்றால முரி என்ற அதே பெயரில் மற்றொரு இடம் இந்தோனேசியாவில் உள்ளது. அந்த மற்றொரு முரி ஜகார்த்தா நகரத்தில் உள்ளது.[1]

செயல்பாடு

[தொகு]

இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகம் 1990 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நாள் ஆக ஆக, பதிவுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சதுரத்திற்கு மொத்தம் 600 மீட்டர் பரப்பளவைக் கொண்டு இந்த அருங்காட்சியக வளாகம் அமைந்துள்ளது. இது ஒரு சுத்தமான சுற்றுச்சூழலுடன் அமைந்து காணப்படுகிறது. நிர்வாகத்தினர் அதனைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இங்கு உள்ள ஆவணப் பதிவுகள் அனைத்தும் வெளியில் தெரியும் அளவில் அமைக்கப்பட்டுள்ள காட்சி சாளரத்திற்குள் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வசதிகளைப் பொறுத்தவரை, இந்த கட்டிடத்தில் கழிப்பறைகள் உள்ளன. மேலும் பிற பொதுவான அருங்காட்சியகங்களைக் காணப்படுவது போல ஓய்வெடுக்கும் இடம் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் உள்ளே புகைப்படங்களை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இருந்தாலும் இந்த அருங்காட்சியகத்தின் வளாகத்திற்குள் அதிக ஒலி எழுப்புதல் கூடாது. அதுபோலவே அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருகின்ற பிற பார்வையாளர்களைத் தொந்தரவு செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை.[1]

இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருவோர் அருங்காட்சியகத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்பாக, முதலில் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகவும். அவ்வாறு அறிந்துகொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தமக்குத் தேவைப்படுகின்ற அருங்காட்சியகம் தொடர்பான தகவல்களை அருங்காட்சியகக் காப்பாளர் அல்லது உள்ளூர் வழிகாட்டியிடமிருந்து எளிதாகப் பெற்றுக் கொடள்ளலாம். நம்பகமான தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த அருங்காட்சியகத்தை ஜெயா சுப்ராணா என்பவர் கட்டியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. ஆரம்பத்தில் இந்த அருங்காட்சியகத்தின் பெயர் ரெகார் இந்தோனேசிய அருங்காட்சியகம் அல்லது முரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் 2005 ஆம் ஆண்டு முதல் ரெகோர்-டுனியா இந்தோனேசியா அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஏனென்றால், நாளடைவில் இந்த அருங்காட்சியகம் மற்ற நாடுகளிலிருந்தும் ஆவணப் பதிவுகளை சேகரிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக இந்தோனேசிய உலக ஆவண அருங்காட்சியகம் (ரெகோர்-டுனியா இந்தோனேசியா அருங்காட்சியகம்) என்றழைக்கப்பட ஆரம்பித்தது. இதன் நோக்கம் கின்னஸ் உலக ஆவணப்பதிவிற்கு நிகரானதாக அமைந்துள்ளது.[1]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]