இந்தி ருசி பாய் பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தி ருசி பாய் பாய் (Hindi rusi bhai bhai பொருள்: இந்தியர்களும் உருசியர்களும் சகோதரர்கள்") என்பது 1950கள் முதல் 1980கள் வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் முழக்கம் ஆகும். [1] [2] [3] இது இந்தியாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் அதிகாரப்பூர்வமாக முழங்கப்பட்டது. 1955, நவம்பர், 26 அன்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் நிக்கித்தா குருசேவ் இதை அறிவித்தார். [4]

வரலாறு[தொகு]

"அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கோட்பாடுகள்" அல்லது "பஞ்ச சீலம்" என்பதன் கீழ், 1954-1962 இக்கும் இடையில், புதிய குடியரசான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான சகோதரத்துவத்தை அறிவிக்கும் வகையில் உருவாக்கபட்ட "இந்தி சினி பாய் பாய்" என்ற இதேபோன்ற முழக்கத்திலிருந்து இது வந்தது. இறுதியில் 1962 இன் இந்திய சீனப் போருடன் அது முடிவடைந்தது. இதேபோல், சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ-பீக்கிங் பாடலில் இருந்து பெறப்பட்ட "உருசியர்களும் சீனர்களும் என்றென்றும் சகோதரர்கள்" என்ற முழக்கம் இருந்தது. அது சீன-சோவியத் பிளவுடன் முடிந்தது. [5]

இந்த முழக்கம் சோவியத் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டது, எடுத்துக்காட்டாக, லாசர் லாகின் எழுதிய "ஓல்ட் மேன் ஹாட்டாபிச்" என்ற நூலிலும் தொடர்புடைய திரைப்படத்திலும் இடம்பெற்றது. [6] லெவ் காசிலின் "பீ பிரிபெர்டு, யுவர் மெஜஸ்டி" படத்திலும் இது முக்கியமாக இடம்பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், 1991 இல் எல்டார் ரியாசனோவ் எழுதிய ப்ராமிஸ்டு ஹெவன் என்ற திரைப்படம் போன்றவற்றிலும் இந்த பயன்பாடு தொடர்ந்தது.

இந்தி மொழியில் பாய் என்ற சொல்லுக்கு "சகோதரன்" என்று பொருள் ஆகும். மேலும் சொற்பிறப்பியல் ரீதியாக உருசிய சொல்லான брат ("பிராட்") உடன் இது ஒத்துள்ளது. பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் இந்தச் சொல்லுடன் ஒத்துப் போகிறது உள்ளன: அவை ஆங்கிலத்தில் பிரதர், லத்தீன் மொழியில் frater (ஃபிரதர்), கிரேக்கத்தில் φράτηρ(ஃபிராதேர்) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Anand, Aanchal (19 August 2011). "Hindi-Russi Bhai Bhai: Celebrating 40 years of the Friendship Treaty".
  2. "In India- Formed, the National Preparatory Committee for the XIX World Festival of Youth and Students in Russia – BRICS International Forum". www.bricsforum.in.
  3. "r/PropagandaPosters - Soviet Poster in Russian and Hindi Saying "Hindi rusi bhai bhai" Translation- "Russians and Indians are brothers" Post 1962". reddit.
  4. (in உருசிய மொழி) Давно.ру
  5. (in உருசிய மொழி) Серов, Вадим. Энциклопедический словарь крылатых слов и выражений. «Локид-Пресс», 2003.
  6. (in உருசிய மொழி) Л. Лагин. Старик Хоттабыч
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தி_ருசி_பாய்_பாய்&oldid=3750812" இலிருந்து மீள்விக்கப்பட்டது