இந்திரா நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரா நாயக் (Indira Naik) இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த சூபி மற்றும் கசல் பாடகர் ஆவார். இவர் பாட்டியாலா காயகி பாரம்பரியமாகப் பயிற்சி பெற்றவர். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கசல்கள், பஜனைகள் மற்றும் சூபி ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார்.[1] சூபித்துவம் இவருக்கு ஓர் உத்வேகத்தினை அளிக்கின்றது.[2]

இளமை[தொகு]

இந்திரா தனது தந்தை சரோத் மற்றும் சிதார் இசைக்கலைஞராகவும், தாய் பரத நாட்டியம் குருவாகவும் இருந்ததால் மிகச் சிறிய வயதிலேயே இசையை கற்று வெளிப்படுத்தினார்.[3]

தனது பள்ளிப் பருவத்தில் இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதால், இந்திராவின் பெற்றோரும் இவருக்கு இசையில் தீவிரமாகப் பயிற்சி அளிக்க முயற்சி எடுத்துக் கொண்டனர். மேலும் இந்திரா பண்டித. பாட்டியாலா கரானா சத்யநாராயணன் சிங்கிடமும் பின்னர் மொகிந்தர்ஜீத் சிங்கிடமும் குரல் பயிற்சி பெற்றார். பல ஆண்டுகளாக, இவர் தயால் தாகூரிடமும் கஜல் பயிற்சியினை ஐதராபாத்து வித்தல் ராவின் கீழ் பயின்றார்.[4]

இசைத்தொகுப்பு வெளியீடுகள்[தொகு]

  • கிருஷ்ணா கிருஷ்ணா - பஜனைத் தொகுப்பு (1994)
  • ரன் ஜூன்- குசராத்தி சுகம் சங்கீதம் (1994)
  • ஆம் கே லியே - கசல் இசைத்தொகுப்பு (1998)
  • தாசாவூர் - கசல் இசைத்தொகுப்பு (2009)

மற்றவை[தொகு]

  • தொலைக்காட்சி தொடர்களுக்கான பின்னணி-சாயா, அலாப், பிர் பி தில் ஹை இந்துஸ்தானி, பாபி
  • எம். டி. எச் மசாலா, விளம்பர காணொலி பின்னணி.
  • டிரினிட்டி கலை விழா - கானா கலா வாணி விருதுகள்
  • பின்னணி-மாதுரி தீட்சித் பன்னா சாஹ்தி ஹூன்பிரதான மாதுரி தீட்சித் பன்னா சாஹ்தி ஹூன்
  • காசுமீர் குறித்த திரைப்படப் பிரிவு ஆவணப்படத்திற்கான பின்னணி-சூரஜ் கா பரிவார்

இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள்[தொகு]

பன்னாட்டு இசை நிகழ்ச்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sufi singer Indira Naik to enthrall Chandigarh". 27 August 2018. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/sufi-singer-indira-naik-to-enthrall-chandigarh/articleshow/65566036.cms. 
  2. "Internationally acclaimed Indian Sufi/Classical singer for two shows in Guyana". Guyana Chronicle. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  3. "Making her musical mark: Meet Indira Naik". In.news.yahoo.com. 25 October 2011. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
  4. "Indira Naik and troupe thrill Guyanese". Guyanatimesgy.com. 10 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_நாயக்&oldid=3915858" இலிருந்து மீள்விக்கப்பட்டது