இந்திரா காந்தி கோளரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திரா காந்தி கோளரங்கம்
Indira Gandhi Planetarium
Indirā Gāndhī Tārāmaṇḍal
Patna-planetarium.jpg
இந்திரா காந்தி கோளரங்கம்
நிறுவப்பட்டது20 சூலை 1989
அமைவிடம்இந்திரா காந்தி அறிவியல் வளாகம், பட்னா, பீகார்
வகைகோளரங்கம் [1]
வருனர்களின் எண்ணிக்கை985,100 (2007)
இயக்குநர்[http://dst.bih.nic.in அறிவியல் தொழிநுட்ப துறை, பீகார் அரசு


இந்திரா காந்தி கோளரங்கம் (Indira Gandhi Planetarium) இந்தியாவின் பீகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவில் அமைந்துள்ள இந்திரா காந்தி அறிவியல் வளாகத்தில் உள்ளது. பாட்னா கோளரங்கம் என்றும் இதை அழைப்பார்கள். பீகார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ₹110 மில்லியன் செலவில் கோளரங்கத்தை கட்டியது.[2] 1989 ஆம் ஆண்டில் பீகார் முதலமைச்சராக இருந்த சிறீ சத்யேந்திர நரேன் சின்காவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு[3] 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் பெயர் கோளரங்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி கோளரங்கம் ஆசியாவிலுள்ள மிகப்பெரிய கோளரங்கங்களின் ஒன்றாகும். பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கிறது. வானியல் தொடர்பான திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. இங்கு நடைபெறும் கண்காட்சிகள் பல பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

பாரம்பாரியமான மின்காந்த கதிர்வீச்சால் இயங்கும் இயந்திரத் தொழில் நுட்பம் இங்கு திரையிடலுக்கு பயன்படுத்தப்படுகிறது.[4]

விமர்சனம்[தொகு]

மேலும் நவீன மின்னணு பட வீழ்த்திகளுக்கு மாறாக பாரம்பரிய இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் அடிக்கடி படங்களை மாற்றுவது கடினமாக உள்ளது. இதன் விளைவாக, அதே படம் பல ஆண்டுகளாக காட்டப்படலாம் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.[4]

போட்டி[தொகு]

பீகாரின் முதல் இலக்கமுறை கோளரங்கம் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாட்னாவில் காந்தி மைதானத்திற்கு அருகிலுள்ள சிறீ கிருட்டிணா அறிவியல் மைய வளாகத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.[4] இந்த கோளரங்கம் 50 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன இலக்கமுறை படவீழ்த்தி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]