உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விதைப் பெட்டகம்

ஆள்கூறுகள்: 34°02′49″N 77°55′50″E / 34.04704°N 77.93054°E / 34.04704; 77.93054
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய விதைப் பெட்டகம்
Indian Seed Vault
Map
பொதுவான தகவல்கள்
வகைவிதை வங்கி
இடம்இமாலயா
நகரம்சங் லா கணவாய், லடாக்
நாடுஇந்தியா
ஆள்கூற்று34°02′49″N 77°55′50″E / 34.04704°N 77.93054°E / 34.04704; 77.93054
உயரம்17,300 அடி
திறக்கப்பட்டது2010
உரிமையாளர்இந்திய அரசு

இந்திய விதைப் பெட்டகம் (Indian Seed Vault) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் இருக்கும் லடாக்கில் உள்ள சாங் லா மலைப் பாதையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான விதை வங்கியாகும். 2010 ஆம் ஆண்டு உயர் உயர ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனமும் தேசிய தாவர மரபணு வளங்கள் அமைப்பும் இணைந்து விதைவங்கியை உருவாக்கின. இந்த விதை வங்கி உலகின் இரண்டாவது பெரிய விதை வங்கியாகும்.[1]

வரலாறு

[தொகு]

பிபிஏ எனப்படும் (பீச் பச்சாவ் அந்தோலன்) விதைகளை காப்பாற்று இயக்கம் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவின் உத்தரகண்டில், விசய் சர்தாரி தலைமையில் தொடங்கியது. நாட்டு விதைகளை சேமிப்பதற்காக விதை வங்கிகள் உருவாக்கப்பட்டன.[2]

விதை சேமிப்பு

[தொகு]

10,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட விதைகள் மற்றும் 200 தாவர இனங்கள் இந்திய விதைப் பெட்டகத்தில் சேமிக்கப்படுகின்றன. [3] இந்த விதைகளில் பாதாம், பார்லி, முட்டைக்கோசு, கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, தக்காளி, அரிசி, கோதுமை போன்றவற்றின் விதைகளும் அடங்கும். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Freezing Future: Inside Chang La, India's Doomsday Vault In The Himalayas". The Better India. 1 March 2018.
  2. "Beej Bachao Andolan, Save Seed Movement of Uttarakhand". Uttarakhand Stories (in ஆங்கிலம்). 28 March 2016.
  3. Dobson, Jim. "A Doomsday Vault In India Holds Frozen Storage For The Survival Of Future Generations". Forbes (in ஆங்கிலம்).
  4. "Seed safety vault in Ladakh". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_விதைப்_பெட்டகம்&oldid=3211171" இலிருந்து மீள்விக்கப்பட்டது