இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கம் (Association of Medical Physicists of India - AMPI) மும்பையில் 1976 ல் பதிவு செய்யப்பட்டது. இதில் நாட்டமுள்ள அறிவியல் பட்டதாரிகள், மருத்துவ இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்கள. உறுப்பினராகலாம். இச்சங்கம், இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் (Indian National Science academy) ஓர் உறுப்பு சங்கம் ஆகும். மேலும் இது பன்நாட்டு மருத்துவ இயற்பியலாளர் அமைப்பின் ( International Organisation of Medical Physicists- IOMP) உறுப்பு நாடாகும்.
இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள்:
- மருத்துவத் துறையிலும் உயிரியல் துறையிலும் இயற்பியலின் பயன்பாட்டினை ஊக்கப்படுத்துதல்.
- மருத்துவ இயற்பியல் பற்றிய படிப்பு, ஆராய்ச்சி, மற்றும் முன்னேற்றத்தினை முன் எடுத்துச் செல்லுதல்.
- கருத்தரங்குகளையும் கூட்டங்களையும் கூட்டி உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் ஏற்பட உதவுவது.
- உலகில் நடைபெறும் மருத்துவ இயற்பியல் நிகழ்வுகளை உறுப்பினர்களிடையே பரப்ப ஆவனசெய்தல்.
சங்கத்தின் குறிக்கோளிற்கு இணங்க ஆண்டுதோறும் மாநாடுகளும் அவ்வப்போது பன்நாட்டு ஆய்வரங்கங்களும் நடத்தப்படுகின்றன. பல மாநிலங்களில் கிளைகள் உள்ளன.சங்கத்தின் காலாண்டு ஆய்விதழாக Journal of medical Physics வெளியிடப்படுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.ampi.org.in/
- http://www.ampi-nc.org/index.asp பரணிடப்பட்டது 2015-06-28 at the வந்தவழி இயந்திரம்
- http://www.ampicon2012.org.in/ பரணிடப்பட்டது 2013-04-07 at the வந்தவழி இயந்திரம்
- http://ampicon2013.org.in/ பரணிடப்பட்டது 2013-06-14 at the வந்தவழி இயந்திரம்
- http://www.ncbi.nlm.nih.gov/pmc/journals/976/