இந்திய பல்மருத்துவ சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பல்மருத்துவ சங்கம்
Indian Orthodontic Society
சுருக்கம்IOS
உருவாக்கம்1965
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை பகுதி
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
பல்வீந்தர் சிங்
பொதுச்செயலாளர்
சஞ்சய் லாப்
மைய அமைப்பு
பல்
வலைத்தளம்www.iosweb.net

இந்தியப் பல்மருத்துவ சங்கம் (Indian Orthodontic Society) என்பது பல் மருத்துவர்களுக்கான தொழில்முறை சங்கமாகும். இது 1965-ல் இந்தியாவின் மும்பையில் தொடங்கப்பட்டு இந்திய தொழில்முறை சட்டம் 1992-ன் கீழ் தமிழ்நாட்டின் வேலூரில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும்.

வரலாறு[தொகு]

இந்தியப் பல்மருத்துவ சங்கம் தனது முதல் ஆண்டு மாநாட்டை 1967-ல் புது தில்லியில் நடத்தியது. இந்தியப் பல்மருத்துவ சங்க ஆய்விதழ் முதல் ஆசிரியர் எச். டி. மெர்ச்சண்டால் மாநாடு தொடங்கப்பட்டது. சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார். நைஷாத் பரிக் நிறுவன செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்தார். மற்ற நிறுவன உறுப்பினர்கள் ஏ.பி. மோடி, கேகி மிஸ்ட்ரி, மோகன்தாசு பட், பிரேம் பிரகாசு மற்றும் மறைந்த ஹெச்எஸ் சேக்.

இந்த சங்கம் 1999-ல் இந்தியப் பல்மருத்துவ வாரியத்தை நிறுவியது. இது இந்தியாவில் பல் மருத்துவத் துறையில் முதல் மற்றும் உலகில் மூன்றாவது வாரியமாகும்.[1] பல் மருத்துவ முதுநிலை கல்வியினை முடித்த பிறகு ஐந்து வருட அனுபவமுள்ள உறுப்பினர்களை ஆய்வு செய்ய வாரியம் நிறுவப்பட்டது. இந்தியப் பல்மருத்துவ சங்கம் 1995-ல் உலக பல்மருத்துவ கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறியது.

நோக்கங்கள்[தொகு]

  1. பல்மருத்துவப் படிப்பைப் பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கவும்
  2. பல் வரிசை சீராக்கம் மற்றும் முக சீரமைப்பு நடைமுறைகளைப் பிரபலப்படுத்தவும் பரப்பவும்
  3. பல்மருத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பித்தல்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About us". Archived from the original on 23 February 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]