இந்திய தேசிய ராணுவத்தின் புதையல் சர்ச்சை
இந்திய தேசிய ராணுவத்தின் புதையல் சர்ச்சை (INA treasure controversy) என்பது சுபாஷ் சந்திர போஸின் கடைசி அறியப்பட்ட பயணத்தில் நாடு கடந்த இந்திய அரசுக்குச் சொந்தமான பொருள்களுக்காக நாடு கடந்த இந்திய அரசின் ஒருவர் மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது தொடர்புடையது. சப்பானில் வாழ்ந்த நாடுகடந்த இந்திய அரசைச் சார்ந்த ஒருவர் பார்மோசாவில் (இன்றைய தைவான்) விமான விபத்தில் அவரை கொன்று விட்டு போஸின் உடைமைகளில் இருந்து கணிசமான அளவு தங்க ஆபரணங்களையும், விலை உயர்ந்த கற்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.[1] மீட்கப்பட்ட புதையலின் ஒரு பகுதியை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் குறித்து இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், தோக்கியோவில் உள்ள இந்திய இராசதந்திரிகள் பலமுறை எச்சரித்த போதிலும், ஜவகர்லால் நேரு நாடு கடந்த இந்திய அரசோடு தொடர்புடைய ஆண்கள் தனிப்பட்ட நலனுக்காக நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சில நேரு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மீண்டும் மீண்டும் சப்பானுக்கு எடுத்துச் சென்றதாகவும், பின்னர் நேருவின் அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் அரசாங்கப் பாத்திரங்களை பெற வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. [1] கூறப்படும் புதையலின் மிகச் சிறிய பகுதி 1950களில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. [1]
ஆவணப்படம்
[தொகு]- 'Netaji Bose - The Lost Treasure' a documentary by History TV18 channel.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kavitha Muralidharan. "Who shrunk Netaji's fortune?". India Today. Retrieved 2015-09-19.
- ↑ "'Netaji Bose - The Lost Treasure'". HISTORY TV18 (in ஆங்கிலம்). Retrieved 23 January 2020.