இந்திய தடகள விளையாட்டுகள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு (Athletics Federation of India, AFI) இந்தியாவில் தடகள விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் மிக உயரிய அமைப்பாகும். இது நாட்டில் தடகளப் போட்டிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை உடையது. இது முன்னதாக இந்திய தொழில்முறையற்ற தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு (Amateur Athletic Federation of India, AAFI ) என அழைக்கப்பட்டு வந்தது. இது ஆசிய தடகள விளையாட்டுக்கள் சங்கம் (AAA) மற்றும் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் (IAAF) ஆகிய அமைப்புகளுடன் இணைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்திய தொழில்முறையற்ற தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பாக 1946இல் உருவானது. மகாராசா யத்வீந்திர சிங் மற்றும் முனைவர் ஜி.டி சோந்தி இதற்கான முனைப்புகளை மேற்கொண்டனர். புதிய கூட்டமைப்பிற்கு முதல் தலைவராக முனைவர் சோந்தி இருந்தார். ஏப்ரல் 13, 1950இல் இவர் பதவி விலகினார்.

போட்டிகள்[தொகு]

இந்தக் கூட்டமைப்பு நடத்தும் போட்டிகள் மூன்று வகுப்புகளாப் பிரிக்கப்பட்டுள்ளன: “I”, “II” & “III”. வகுப்பு I போட்டிகளை கூட்டமைப்பே நடத்துகின்றது. வகுப்பு II போட்டிகள் கூட்டமைப்பு அனுமதி வழங்கி இணைந்துள்ள அலகுகள்/சங்கங்கள்/அமைப்புகள் நடத்துவனவாகும். ஒழுங்கான காலவெளியில் இல்லாது கூட்டமைப்பு நேரடியாக நடத்தும் போட்டிகள் மூன்றாம் வகுப்பு III போட்டிகளாகும்.

உசாத்துணைகள்[தொகு]

  • History of Physical Education and Sports By Ram Mohun Mojumdar
  • History, Foundation of Physical Education and Educational Psychology By Tahir P. Hussain

வெளியிணைப்புகள்[தொகு]