இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை என்பது பாக் நீரிணையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை நீர்ப்பரப்பில் மீன்பிடிப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறிக்கும்.
பின்னணி
[தொகு]1974இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதன்படி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6வது பிரிவில் இரு நாட்டு மீனவர்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்கலாம் என்று உள்ளது. 1969 வியன்னா உடன்படிக்கையின் விதி 6(1)இல் விளக்கப்பட்டுள்ளதன்படி, ஒப்பந்த முக்கிய அம்சத்தை ஏதாவது ஒரு நாடு மீறும் போது மற்ற நாட்டிற்கு உடன்படிக்கையை ரத்து செய்யவோ, தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ உரிமை உண்டு. 5000 சதுர கி.மீ இலங்கை கடற்கரையில் 150 சதுர கி.மீட்டரில் தமிழக மீனவர்கள் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கின்றனர்.
காலக்கோடு
[தொகு]அக்டோபர் 2015
[தொகு]தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூபாய் 15 கோடி அபராதம் விதிக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது.
உசாத்துணை
[தொகு]- Conflict brews between Sri Lankan and Indian fishermen
- பாக்கு நீரிணை மீனவர்கள் பற்றிய சர்வதேச கருத்துப் பட்டறை