இந்தியா-லாத்வியா உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா - லாத்வியா உறவுகள்
Map indicating locations of இந்திய and லாத்வியா
இந்திய லாத்வியா

இந்தியா - லாத்வியா உறவுகள் (India–Latvia relations) இந்தியாவிற்கும்]] லாத்வியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைக் குறிக்கிறது. லாத்வியா நாட்டின் சுதந்திரத்தைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் அரசியல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. [1] லாத்வியாவுக்கான இந்தியாவின் பணி சுவீடனில் உள்ள இசுடாக்கோம்ம் ந்கரிலுள்ள இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டது; லாத்வியா புது தில்லியில் ஒரு தூதரகத்தையும் ஓர் அலுவலகத்தையும் பராமரிக்கிறது.

பொருளாதார உறவுகள்[தொகு]

2013 ஆம் ஆண்டில், லாத்வியாவும் இந்தியாவும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார நன்மைகளின் அடிப்படையில் லாத்வியாவிற்கு இந்திய ஏற்றுமதியை அதிகரித்தது. [2] தற்போது இரு நாடுகளும் போக்குவரத்து மற்றும் தளவாடங்களில் நெருக்கமான மற்றும் ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து வருகின்றன. [3]

லாத்வியாவையும், எசுதோனியா மற்றும் லிதுவேனியாவையும் பால்டிக் நாடுகளில் இந்திய நலன்களின் மூலோபாய உறவுகளாக இந்தியா பார்க்கிறது. [4]

பயணங்கள்[தொகு]

2017 ஆம் ஆண்டில், லாத்விய பிரதமர் மாரிசு குசின்சுகிசு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வருகை தந்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் லாத்வியா நாட்டிற்குச் சென்று லாத்வியன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India-Latvia relations" (PDF).
  2. "LATVIA-INDIA DOUBLE TAXATION AVOIDANCE AGREEMENT TO BE SIGNED IN NEAR FUTURE". 7 May 2013.
  3. "Latvia and India need to build closer cooperation in transport and logistics".
  4. "From India to Latvia: Interest in the Baltic States Brings to Riga".
  5. "Kučinskis: The objective of visit to India is to accelerate the development of economic relations between the countries". 3 November 2017.

புற இணைப்புகள்[தொகு]