இந்தியா-ஆத்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியப் பிரதமர் இசுகாட்டு மாரிசன் (இடது) மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு சந்திப்பு; நவம்பர் 2018.

இந்தியா-ஆத்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Australia-India Comprehensive Economic Cooperation Agreement) இந்திய ஆத்திரேலிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தமாகும். 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாடுகளும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கின. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் நாளன்று ஆத்திரேலிய நாட்டின் மாரிசனை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைச்சர் டான் டெகான் மற்றும் இந்திய மோடி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பியூசு கோயல் ஆகியோரும் ஓர் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[1]

இந்தியா - ஆத்திரேலியா இடையே போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், பொருளாதார உறவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நடப்பாண்டு இறுதி மற்றும் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு பின்பற்றப்பட உள்ளது. இருதரப்புவர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் சிறந்த கருவியாக இது இருக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல் கூறுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]