இந்தியாவில் மேசைப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேசைப் பந்தாட்டம் (Table tennis) இந்தியாவில் விளையாடப்படும் உள்ளரங்க விளையாட்டுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் உள்ளரங்க விளையாட்டாகும். இவ்விளையாட்டானது மேற்கு வங்காளம் , தமிழ்நாடு, மகாராட்டிரம் மற்றும் குசராத்து போன்ற மாநிலங்களில் மிகச் சிறப்பாக விளையாடப்படுகிறது.

இந்திய மேசைப்பந்தாட்ட கூட்டமைப்பு இவ்விளையாட்டிற்கான இந்தியாவின் அதிகாரபூர்வமான ஓர் அமைப்பாகும். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தரவுகளின் படி இந்திய ஆண்கள் அணி உலகளவில் 10 ஆவது இடத்திலும் இந்தியப் பெண்கள் அணி உலகளவில் 22 ஆவது இடத்திலும் உள்ளன. ஒற்றையர் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், மணிகா பத்ரா போன்ற மேசைப் பந்தாட்ட வீர்ர்கள் முதல் 50 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rankings". ittf.com. பார்த்த நாள் 2019-02-10.

புற இணைப்புகள்[தொகு]