இதரவிதர உவமையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதரவிதர உவமையணி என்பது உவமையணியின் ஒரு வகையாகும். இதனை 'தடுமாறுவமை' என்றும் கூறுவர். பொருளாகக் கூறப்பட்டது சில சமயம் உவமையாகவும். உவமையானது சில சமயம் பொருளாகவும் மாறி மாறி ஒரு தொடர்ச்சியாக வருவது இதர விதரம் ஆகும். (இதரம்+ இதரம் =இதரவிதரம்- ஒன்றுக்கொண்டு என்பது பொருள்)
சான்று

களிக்கும் கயல்போலும் நுங்கண்; நும் கண்போல்
களிக்கும் கயலும்; கனிவாய்த் - தளிர்க்கொடியீர்!
தாமரை போல்மலரும் நும்முகம்; நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்.

விளக்கம்:
கயல் போலும் நுங்கண்; நுங்கண் போல் களிக்கும் கயல் எனப் பொருளும் உவமையும் ஒன்றுக்கொன்று உவமையாய்த் தொடர்ந்து வந்தமையால் இது இதரவிதர உவுவமையாயிற்று. இதரவிதர உவமை அணியை சந்திராலோகம் என்ற இலக்கண நூல், புகழ்பொருளுவமை எனக் கூறுகிறது.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதரவிதர_உவமையணி&oldid=959058" இருந்து மீள்விக்கப்பட்டது