இணையச் சேவை வழங்கி
இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை இணையத்தில் இணைக்கின்றனர்.
இணையச் சேவை வழங்கி வரலாறு[தொகு]
காரணம்[தொகு]
இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு (intranet) என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக, மேலும் இதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தனர். இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.
முதல் வணிக ரீதியிலான சேவை[தொகு]
1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் [1] நிறுவப்பட்டன. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாகக் கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே, முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐ.எஸ்.பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989 ஆம் ஆண்டில் சேவை வழங்கப்பட்டது.[2]
இந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள்[தொகு]
- பி எஸ் என் எல்
- எம் டி என் எல்
- ஏர்டெல்
- டாட்டா
- வோடாபோன்
- ஜியோ
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Clarke, Roger. "Origins and Nature of the Internet in Australia". 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Robert H'obbes' Zakon. "Hobbes' Internet Timeline v10.1". November 14, 2011 அன்று பார்க்கப்பட்டது. Also published as Robert H. Zakon