இடப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் இலக்கணத்தில், இடப் பெயர் என்பது பெயர்ச்சொற்களின் ஒரு வகையாகும். இவை இடத்தைச் சுட்டுகின்ற பெயர்கள் ஆகும். கோயில், ஊர், இலங்கை, சென்னை, வண்டலூர் என்பன இடப் பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள். இவற்றுள் கோயில், ஊர் என்பன குறிப்பிட்ட இட வகைகளுக்கான பொதுவான பெயராக அமைந்துள்ளன. அதாவது கோயில் எனும்போது அது கோயில்களில் எதையும் குறிக்கலாம். இது போலவே ஊர் என்பதும் பல இலட்சக்கணக்கான ஊர்களில் எதாவது ஒன்றைக் குறிக்கக்கூடும். இதனால் இவ்வகை இடப்பெயர்கள் பொது இடப் பெயர்கள் எனப்படுகின்றன. இலங்கை, சென்னை போன்றவை குறிப்பாக ஒரு இடத்தை மட்டுமே குறிக்கச் சிறப்பாக அமைந்தவை. இதனால் இத்தகையவை சிறப்பு இடப் பெயர்கள் எனப்படுகின்றன.

அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் கு உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்_பெயர்&oldid=1647838" இருந்து மீள்விக்கப்பட்டது