இஞ்சேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஞ்சேரா என்பது புளித்த நொதித்த டெஃப் மாவினால் செய்யப்படும் தட்டை ரொட்டி வகையாகும். பஞ்சு போன்ற மென்மையான அமைப்பைக் கொண்ட இந்த ரொட்டி வகை, எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய உணவாகவும் பாரம்பரிய உணவாகவும் உள்ளது.[1][2][3]

இஞ்சேரா
Alicha 1.jpg
இஞ்சேரா ரொட்டியை மையமாகக் கொண்ட பாரம்பரிய உணவு
வகைதட்டை ரொட்டி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்எரித்திரியா, எத்தியோப்பியா [4][5]
முக்கிய சேர்பொருட்கள்டெஃப் மாவு (அரிசி, கோதுமை, பார்லி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவுகளிலும் செய்யலாம்)
Cookbook: இஞ்சேரா  Media: இஞ்சேரா

தயாரிப்பு[தொகு]

கேழ்வரகு குடும்பத்தைச் சேர்ந்த டெஃப் எனும் வகைச் செடியின் விதைகளை அரைத்து மாவாக்கி நொதிப்பதன் மூலம் இஞ்சேரா தயாரிக்கப்படுகிறது. டெஃப் செடி பீடபூமிகளில் மட்டுமே வளரும் என்பதாலும் அதற்கு போதுமான அளவு மழை நீர் தேவைப்படும் என்பதாலும் விலைமதிப்பான பொருளானது டெஃப் மாவு. இந்தக் காரணத்தினால் அரிசி மாவு, கோதுமை மாவு, பார்லி மாவு, கம்பு மாவு, சோளமாவு ஆகியவற்றிலும் இஞ்சேரா தயாரிக்கப்படுகிறது.

மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் நொதிக்க விட வேண்டும். நொதியாகுவதற்கு எர்ஷோ என்கிற மஞ்சள் நிற பாரம்பரிய திரவம் ஒன்று பயன்படுகிறது. இத்திரவம் சேர்ப்பதனால் பஞ்சு போன்ற மென்மையான தன்மை இந்த ரொட்டிக்கு கிடைக்கிறது.

இஞ்சேராவின் தயாரிப்பு

ஒப்பீடு[தொகு]

இந்திராவின் வட்ட வடிவத்தாலும் பஞ்சு போன்ற தன்மையாலும் பிரெஞ்சின் உணவான கிரீப்புடனும் இந்திய உணவான தோசையுடனும் தென்னிந்திய உணவான அப்பத்துடனும் ஒப்பிடப்படுகிறது. இஞ்சேரா வடிவத்தில் மேற்சொன்ன உணவுகளுடன் ஒப்பி இருப்பினும், தோற்றத்தில் தனித்துவமானது.

இஞ்சேராவின் மேற்பகுதியில் குழிப்போன்ற பகுதிகளைக் காண முடியும். இந்த குழிகள் அதை இன்னும் மிருதுவாக்குவதோடு தொட்டுக் கொண்டு உண்ணவும் சௌகரியம் ஏற்படுத்துகிறது. இரண்டு வேறு நாடுகளின் பாரம்பரிய உணவாக விளங்கும் இஞ்சேரா, இன்றளவும் பரவலாக உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தயாரிப்பு முறைகள் மாறினாலும், இஞ்சேரா எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய வீடுகளின் அன்றாட உணவாக உள்ளது.[6]

இஞ்சேராவின் மேற்பகுதி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சேரா&oldid=3299692" இருந்து மீள்விக்கப்பட்டது