இசைக்கவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசைக்கவை என்பது ஒற்றை அதிர்வெண் உள்ள ஒலியை உண்டாக்கும் ஒரு கருவி ஆகும். பொதுவாக இது உருக்கிரும்பால் செய்யப்பட்டிருக்கும். கவட்டை அல்லது ஆங்கில எழுத்து யூ வடிவிலான பகுதியை மற்றொரு பொருளில் மோத வைக்கும் போது சில நேரத்திற்குப் பின் தூய ஒற்றை அதிர்வெண் ஒலி பெறப்படும். இசைக்கருவிகளில் சுருதி சேர்ப்பதற்கு இசைக்கவை முக்கியமாகப் பயன்படுகிறது. இயற்பியல் ஆய்வகங்களில் ஒத்ததிர்வுத் தம்பம் போன்ற ஒலியியல் ஆய்வுகளை மேற்கோள்ளப் பயன்படுகிறது. மருத்துவத் துறையில் நோயாளியின் காது கேட்கும் திறனைச் சோதிக்கப் பயன்படுகிறது.
ஆங்கிலேய இசைக்கலைஞர் ஜான் ஷோர் என்பார் கி.பி. 1711 இல் இசைக்கவையைக் கண்டறிந்தார்.