இசுலாமியப் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமிய புத்தாண்டு அல்லது ஹிஜ்ரி புத்தாண்டு (Islamic New Year ) (அரபு மொழி: رأس السنة الهجرية‎) இசுலாமிய நாட்காட்டியில் ஆண்டு தொடக்கத்தை குறிக்கும் நாள் ஆகும்.இசுலாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முகரம் மாதத்தின் முதல் நாள் இசுலாமியப் புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

கி.பி. 622 இல் இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி அரபு மொழியில் ஹிஜிரத் எனப்படும். அந்த ஆண்டே முதல் இசுலாமியத் புத்தாண்டு ஆகும்.[1]

கணக்கீடுகள்[தொகு]

சில இசுலாமியர்கள் நிலவை உள்ளூரில் நேரடியாக பார்த்து புதிய மாதத்தினைத் தீர்மானிக்கின்றனர். எனவே புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.[2] சவுதி அரேபியா உட்பட பெரும்பாலான இசுலாமிய நாடுகளில்,வானியல் கணக்கீடுகள் பின்பற்றி இசுலாமிய நாட்காட்டியில் எதிர்கால தேதிகள் தீர்மானிக்க படுகின்றன. புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. [3]

நாள் ஆரம்ப நேரம்[தொகு]

இசுலாமிய நாட்காட்டியில் நாள் சூரியன் மறையும் நேரம் அல்லது நிலவு தோன்றும் நேரம் என வரையறுக்கப்படுகிறது.

கிரிகோரியன் நாட்காட்டி ஒப்பீடு[தொகு]

இசுலாமிய நாட்காட்டி சந்திர ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி சூரிய ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. எனவே இசுலாமிய ஆண்டு கிரிகோரியன் ஆண்டை விட பன்னிரெண்டு நாட்கள் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் அதே நாளில் வரவில்லை.

கிரிகோரியன் நாட்காட்டியின்படி பின்வரும் தேதிகளில் இஸ்லாமிய புத்தாண்டு ஒத்திருக்கும்:

இசுலாமிய ஆண்டு கிரிகோரியன் தேதி
1430 இ.நா 29 திசம்பர் 2008
1431 இ.நா 18 திசம்பர் 2009
1432 இ.நா 7 திசம்பர் 2010
1433 இ.நா 26 நவம்பர் 2011
1434 இ.நா 15 நவம்பர் 2012
1435 இ.நா 4 நவம்பர் 2013
1436 இ.நா 25 அக்டோபர் 2014
1437 இ.நா 14 அக்டோபர் 2015
1438 இ.நா 3 அக்டோபர் 2016
1439 இ.நா 22 செப்டம்பர் 2017

மேற்கோள்கள்[தொகு]

  1. ஹிஜ்ரி புத்தாண்டு சிறப்புக் கட்டுரை: மக்காவை ஏன் துறந்தார்? [தொடர்பிழந்த இணைப்பு] தமிழ் இந்து, 6 அக்டோபர் 2016.
  2. "Islamic Crescents' Observation Project". 2018-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Islamic Crescents' Observation Project: Saudi Dating System". 2010-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-01-04 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]