இசுலாமாபாத்து மாதிரி சிறப்பு பொருளாதார மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுலாமாபாத்து மாதிரி சிறப்புப் பொருளாதார மண்டலம் (Islamabad Model Special Economic Zone) என்பது சீனா-பாக்கித்தான் பொருளாதார வழித்தடத்துடன் (CPEC) தொடர்புடைய இசுலாமாபாத்தின் இராவத் அருகே அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலமாகும். கூட்டாட்சி தலைநகரில் உள்ள இந்த வகையான ஆரம்ப வசதியை இது குறிக்கிறது. இது 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று நாட்டின் பிரதமர் செக்பாசு செரீப் இதற்கான அடிக்கல்லை நாட்டி மண்டலத்தை திறந்து வைத்தார்.[1] [2]

பின்னணி[தொகு]

இந்த மண்டலம் தேசிய நெடுஞ்சாலை எண் -5 மற்றும் இசுலாமாபாத் விரைவுச்சாலை சந்திப்பில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான பிரதான தொழில்துறை பகுதியை உள்ளடக்கியுள்ளது. $2.5 பில்லியன் முதலீடுகளை இது ஈர்க்கும். சுமார் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, நாட்டில் குறைந்த கார்பன் கால்தடம் தொழில்களின் வளர்ச்சியை வளர்ப்பது இதன் குறிக்கோள்களில் ஒன்றாகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PM lays foundation stone of Islamabad Model Special Economic Zone". www.radio.gov.pk.
  2. Desk, Web (July 18, 2023). "Pakistan no long faces default risk, ready for economic reforms: PM". ARY NEWS.
  3. "CPEC 2013-2023: PM Shehbaz lays foundation of Islamabad Model Special Economic Zone". July 18, 2023.