ஆ. சிவசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. சிவசுப்பிரமணியன் ([1]A. Sivasubramanian) தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளராவார்.[1] பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன் முகங்களுடன் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் துறைகளில் இவர் இயங்கி வருகிறார்.[2]

தொழில்[தொகு]

1967 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், அதேஏ ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியில் சேர்ந்து தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். 2001 ஏப்ரலில் ஓய்வு பெறும் வரை அதே கல்லூரியில் பணிபுரிந்தார். தமிழ் ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கிய இவர் தமிழ்ச்சமுகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தபவராக பரிணமித்தார். சமூக அறிவியல் கூட்டிணைவு அமைப்பின் ஒரு பங்களிப்பாளரும் ஆவார்.

பணிகள்[தொகு]

தென் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், வழக்காறுகள் போன்றவற்றை ஊர்வூராகத் திரிந்து சேகரித்தார். இவருடைய ஆராய்ச்சிப் பணிகள் கள ஆயவை முதன்மையாக கொண்டவையாக இருந்தன.

விருதுகள்[தொகு]

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது “புதுமைப்பித்தன் நினைவு” விருது எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியனுக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.[3] இவர் எழுதிய ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கப்பட்டது.[4]

படைப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

  • பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
  • அடிமை முறையும் தமிழகமும் (1984)
  • வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)
  • ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)
  • மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)
  • பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990)(இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
  • எந்தப் பாதை (2000)
  • வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)
  • கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)
  • தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)
  • தமிழகத்தில் அடிமை முறை (2005,2007 மார்ச்சு,2007நவம்பர், 2010,2012
  • நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)
  • பஞ்சமனா பஞ்சயனா (2006)
  • தோணி (2007)
  • கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)[5]
  • கோபுரத் தற்கொலைகள் (2007)
  • வரலாறும் வழக்காறும் (2008,2010)
  • ஆகஸ்ட் போராட்டம் (2008)
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)
  • உப்பிட்டவரை… (2009)[6]
  • இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)
  • பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)
  • படித்துப் பாருங்களேன்…. (2014)
  • பனை மரமே! பனை மரமே![7]
  • இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்
  • பிள்ளையார் அரசியல்
  • தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் களஞ்சியம் (10 தொகுதிகள்)
  • தமிழக நாட்டுப்ப்றக் கதைக் களஞ்சியம் (10 தொகுதிகள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. பெ.வெயில்முத்து. ""சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!" - ஆ.சிவசுப்பிரமணியன்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20. {{cite web}}: External link in |website= (help)
  2. மு. இளங்கோவன். "பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாட்டுப்புறவியல் செய்திக் களஞ்சியம்!". பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு". திண்ணை. https://puthu.thinnai.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/. பார்த்த நாள்: 20 June 2021. 
  4. "தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  5. "கிறித்தவமும் தமிழ்ச்சூழலும் /ஆ.சிவசுப்பிரமணியன். Kir̲ittavamum tamil̲ccūl̲alum /Ā.Civacuppiramaṇiyan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  6. "ஆற்றுப்படை". புத்தகம். https://puththakam.wordpress.com/tag/%E0%AE%86-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/. பார்த்த நாள்: 20 June 2021. 
  7. "புத்தகத் திருவிழா 2020: சமூகம், பண்பாட்டைப் புரிந்துகொள்ள தாவரங்களைப் படிக்க வேண்டும்! - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் நேர்காணல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சிவசுப்பிரமணியன்&oldid=3640067" இலிருந்து மீள்விக்கப்பட்டது