ஆஸ்திரேலியா நாட்டுப்பண் ( Advance Australia Fair ) என்பது ஆத்திரேலியா நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இதை எழுதி இசையமைத்தவர், ஸ்காட்லாந்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் பீட்டட் டோட்ஸ் மெக்கார்மிக் என்பவராவார். இவர் தன் 21 ஆம் வயதில் சிட்னிக்கு வந்தார். நேரம் கிடைக்கும் போது, உள்ளூர் கிருத்தவ தேவாலயங்களில் சமூகப் பணி செய்துவந்தார். தேவாலய இசைக்குழுவில் சேர்ந்தும் இருந்தார். ஒரு முறை மெக்கார்மிக் ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, அங்கே பல நாடுகளின் நாட்டுப்பண்கள் இசைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கென தனியாக நாட்டுப்பண் இல்லாததைக் கண்டு வருந்தினார். பின்னர் பாடல் ஒன்றை அவரே எழுதி, அந்தப் பாடலுக்கு இசையும் அமைத்தார். 1878 ஆண்டு சிட்னியில் ஒரு விழாவில் முதன்முதலில் இந்தப் பாடல் பாடப்பட்டு பிரபலம் ஆனது. பின்னர் பாடல் சிறிது திருத்தப்பட்டு, 1901 இல் 10 ஆயிரம் பேர் பாடினார்கள். இந்தப் பாடலை இறைவன் அரசியைக் காப்பாராக என்னும் பாடலுக்கு பதிலாக நாட்டுப்பண்ணாக ஏற்பது குறித்து 1977 இல் பொதுமக்களிடம் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்தப்பாடலை ஆஸ்திரேலியாவின் நாட்டுப்பண்ணாக 1984 இல் அறிவிக்கப்பட்டது.
Australians all let us rejoice,
For we are young and free;
We've golden soil and wealth for toil;
Our home is girt by sea;
Our land abounds in nature's gifts
Of beauty rich and rare;
In history's page, let every stage
Advance Australia Fair.
In joyful strains then let us sing,
Advance Australia Fair.
Beneath our radiant Southern Cross
We'll toil with hearts and hands;
To make this Commonwealth of ours
Renowned of all the lands;
For those who've come across the seas
We've boundless plains to share;
With courage let us all combine
To Advance Australia Fair.
In joyful strains then let us sing,
Advance Australia Fair.
ஆஸ்திரேலியன்ஸ் ஆல் லெட் அஸ் ரிஜாய்ஸ்
ஃபார் வி ஆர் யங் அண்ட் ஃப்ரீ
வி ஹேவ் கோல்டன் ஸாயில், அண்ட் வெல்த் ஃபார் டாயில்
அவர் ஹோம் இஸ் கிர்ட் பை ஸீ
அவர் லேண்ட் அபௌண்ட்ஸ் இன் நேச்சர்ஸ் கிஃப்ட்ஸ்
ஆஃப் பியூட்டி ரிச் அண்ட் ரேர்
இன் ஹிஸ்டரிஸ் பேஜ், லெட் எவரி ஸ்டேஜ்
அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்
இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்
அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.
பினீத் அவர் ரேடியண்ட் சதர்ன் க்ராஸ்
வி வில் டாய்ல் வித் ஹார்ட்ஸ் அண்ட் ஹேண்ட்ஸ்
டு மேக் திஸ் காமன்வெல்த் ஆஃப் அவர்ஸ்
ரினௌண்ட் ஆஃப் ஆல் தி லேன்ட்ஸ்
ஃபார் தோஸ் ஹூ ஹேவ் கம் அக்ராஸ் தி ஸீஸ்
வி ஹேவ் பௌண்ட்லெஸ் ப்ளெய்ன்ஸ் டு ஷேர்
வித் கரேஜ் லெட் அஸ் ஆல் கம்பைன்
டு அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்
இன், ஜாய்ஃபுல் ஸ்ட்ரெய்ன்ஸ் தென் லெட் அஸ் சிங்
அட்வான்ஸ் ஆஸ்ட்ரேலியா ஃபேர்.
ஆஸ்திரேலியர்கள் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம்.
ஏனென்றால், நாம் இளைமையானவர்கள்; சுதந்திரமானவர்கள்.
நம்மிடம் பொன் போன்ற மண் உண்டு; உழைப்பதற்கு செல்வம் உண்டு.
நமது நிலம், கடலால் இணைக்கப்பட்டு இருக்கிறது.
நமது நிலம், இயற்கையின் பரிசுகளால் நிரம்பி இருக்கிறது.
வளமையான அபூர்வமான அழகாலும்.
வரலாற்றின் பக்கங்களில் ஒவ்வொரு நிலையிலும் நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.
மகிழ்ச்சியான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக
நியாயமான ஆஸ்திரேலியா முன்னேறட்டும்.
ஒளிவீசும் நமது தெற்கு சந்திப்புக்குக் கீழே
நமது இதயங்களாலும் கரங்களாலும் கடுமையாக உழைப்போம் -
இந்த நம்முடைய ‘காமன்வெல்த்'ஐ
எல்லா நிலங்களிலும் கீர்த்தி வாய்ந்ததாய் செய்ய
கடல்களைக் கடந்து வந்தவர்களுக்குப் பகிர்ந்துகொள்ள, எல்லையில்லா சமவெளிகளைக் கொண்டுள்ளோம்.
துணிவுடன் நாம் எல்லாரும் ஒன்று சேர்வோமாக
நியாயமான ஆஸ்திரேலியாவை முன்னேற்றுவதற்கு;
மகிழ்ச்சியான பிரயாசைகளில் நாம் பாடுவோமாக.