ஆவ்லின் மேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருட்சகோதரி
ஆவ்லின் மேரி
2017 சூலையில் மேரி
தேசியம் இந்தியா
கல்விடாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம், கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித மேரி கல்லூரி, தூத்துக்குடி
பணிகடல் உயிரியலாளர்
விருதுகள்தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் கழகம் வழங்கிய 2002இன் சிறந்த அறிவியலாளர் விருது, நேதாஜி சுபாசு சந்திர போசின் சிறந்த விஞ்ஞானிக்கான தேசிய விருது (2003)

ஆவ்லின் மேரி (Avelin Mary) என்பவர் தமிழ்நாட்டைச் சோ்ந்த பேராசிரியா். கடல்சார் உயிரியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த இவர் மேரியின் பணியாளர்கள் சபையைச் சேர்ந்தவர்.[1] இவர் தூத்துக்குடியிலுள்ள தூய இருதய கடல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ளார்.[2] [3][4]

கல்விப்பயணம்[தொகு]

மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலுள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்தில், பயிா்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளின் ரசாயன பாதிப்பால் குளம் குட்டைகளின் நீா் மாசுபட்டு, அதனால் நன்னீாில் வாழும் இரால்களுக்கு ஏற்படும் தீங்கு குறித்து ஆய்வு செய்து, 1984-ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றாா். ஆஸ்போர்ன் ஆய்வகங்கள் (நியூயார்க் விலங்கியல் சங்கம்) மற்றும் டியூக் பல்கலைக்கழக கடல் ஆய்வகங்கள் (பியூஃபோர்ட், வட கரோலினா) ஆகியவற்றில் தனது முதுகலைப் பணியை முடித்தார்.[5] துலேன் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், டெலாவேர் பல்கலைக்கழகம், ஹவாய் பல்கலைக்கழகம் மற்றும் தைவானில் உள்ள ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை தரும் விஞ்ஞானியாக இருந்தார்.[5] 1988 இல், அவர் தனது சொந்த சுயாதீன ஆராய்ச்சி குழுவை நிறுவுவதற்காக இந்தியா திரும்பினார். கடல் சூழலை பாதிக்கும் நச்சு இரசாயனங்களை இயற்கை மூலங்களிலிருந்து மாற்று சேர்மங்களுடன் மாற்றுவதில் இவரது குறிப்பிட்ட ஆர்வம் உள்ளது.

தொழில்[தொகு]

தூய-இருதய கடல்சாா் ஆய்வு மையம், தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள பெண்களின் உயர்கல்விக்கான கத்தோலிக்க நிறுவனமான புனித மேரிக் கல்லூரியின் முதல்வராக சிலகாலம் இருந்தார்.[5] 1991-ல், கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாக தூய இருதய கடல்சார் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பொசைடன் ஓசியான் சயின்ஸ்.இன்க் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.[2] பவளப்பாறைகள் பற்றிய தனது ஆய்வின் போது, கப்பல்களில் கெட்டுப்போவதைத் தடுக்கும் மற்றும் மில்லியன் கணக்கான டாலர்களைச் சேமிக்கக்கூடிய இரசாயனங்களை அவை உற்பத்தி செய்வதைக் கண்டுபிடித்தார்[2]

விருதுகள்[தொகு]

கேம்பிரிட்ச்லுள்ள சர்வதேச வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி மையத்தால் "20 ஆம் நூற்றாண்டின் 2,000 சிறந்த விஞ்ஞானிகளில்" ஒருவராக மேரி பெயரிடப்பட்டார். 1999-ல், வேனிட்டி அச்சகம் அமெரிக்கன் வாழ்க்கை வரலாற்று நிறுவனம் இவருக்கு "1998 ஆம் ஆண்டின் சிறந்த பெண்"ணுக்கான விருதை வழங்கியது.[6]

2002ஆம் ஆண்டில், புது தில்லியிலுள்ள இந்தியாவின் தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் அகாதமியால் (NESA) ஆண்டின் 14 அறிவியலாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார். கொல்கத்தாவில் இவ்விருதினைப் பெற்றார். சனவரி 2003-ல், ஜாக்ருதி கிரண் அறக்கட்டளையின் 2003ஆம் ஆண்டுக்கான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சிறந்த அறிவியலாளருக்கான தேசிய விருதைப் பெற்ற 12 பேரில் இவரும் ஒருவர்.[7]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sister Avelin Mary | Poseidon Sciences". poseidonsciences.scienceblog.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  2. 2.0 2.1 2.2 "India's Women Achievers: A Tribute to the woman of India" (in en-US). Indian Defence Forum. http://defenceforumindia.com/forum/threads/indias-women-achievers-a-tribute-to-the-woman-of-india.9219/page-2. 
  3. இந்தியா டுடே (ஜனவரி 6,1999). 'ஆவ்லின் மேரி- இது சாத்தியம்'. சென்னை. பக். 30. 
  4. Rajashekar,H.K. (January 4,1998). 'Avelin Mary-Mission Possible'. Chennai. பக். 47. 
  5. 5.0 5.1 5.2 "Sister Avelin Mary | PoseidonSciences". poseidonsciences.com. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  6. "Sister Avelin Mary awards Woman of the Year by American Institute for discovery of fouler". http://indiatoday.intoday.in/story/sister-avelin-mary-awards-woman-of-the-year-by-american-institute-for-discovery-of-fouler/1/256478.html. 
  7. "Archived News | PoseidonSciences". poseidonsciences.com. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவ்லின்_மேரி&oldid=3722339" இலிருந்து மீள்விக்கப்பட்டது