ஆவண அமுதம்
ஆவண அமுதம் (Avana Amudham) என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு காலாண்டிதழ் ஆகும்.[1] இது சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த இதழ் 1986 அக்டோபர்-திசம்பர் முதல் 1994 அக்டோபர் திசம்பர் வரை என தொடர்ச்சியாக 31 இதழ்கள் வெளியாகியுள்ளன. இந்த இதழின் முதல் ஐந்து இதழ்களும் கடைசி ஒன்பது இதழ்களும் தட்டச்சில் வெளியாயின. மற்றவை அச்சில் வெளியாயின.
நோக்கம்
[தொகு]தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் 1640 முதல் தற்காலத்தில் வெளியான அரசாணைகள் வரை சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்கள் பெருவாரியான மக்களைச் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலாண்டிதழ் வெளியிடப்பட்டது. ஆவணக் காப்பகத்தின் பணியாளர்களுக்கும், இளம் ஆய்வாளர்களுக்கும் எழுதுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் காலாண்டிதழ் உள்ளது.
உள்ளடக்கம்
[தொகு]ஆவண அமுதம் இதழானது இரு பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது ஆங்கிலத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலப் பகுதியில் ஆய்வுக் கட்டுரைகளும், ஆவணக் காப்பகத்தில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களும், தமிழ்ப் பகுதியில் சிறுசிறு துணுக்குகளும், சிறுகதைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கும். ஆவணக் காப்பகம் இதுநாள்வரை எவ்வாறு பராமரிக்கபட்டு வருகிறது. இதை ஆய்வாளர்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இடம்பெறன.
ஆவண அமுதம் இதழ்கள் தமிழ் இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. பழைய நூல்கள் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.[2]