தமிழ் இணைய நூலகம்
தமிழ் இணைய நூலகம் அல்லது தமிழிணைய மின்னூலகம்அல்லது மின் நூலகம் என்பது தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ஒரு பிரிவு ஆகும். இங்கு நூல்கள், பருவ வெளியீடுகள் (இதழ்கள், ஆய்விதழ்கள்), சுவடிகள், மற்றும் பண்பாட்டு மரபுரிமை தொடர்புடைய பல்லூடக ஆவணங்கள் கட்டற்ற முறையில் அணுக்கப்படுத்தப்பட்டுள்ளன.[1]
இங்கு நூல் அதன் துணை பகுதிகளாக நாட்டுடைமை நூல், அகராதியியல், பாடநூல் நிறுவனம், அனைத்து நூல்கள் என்றும். இதழ் அதன் துணை பகுதிகளாக ஆய்விதழ், பருவ இதழ், தமிழரசு என்றும். சுவடி அதன் துணை பகுதிகளாக ஓலைச்சுவடி, காகிதச்சுவடி என்றும். பெட்டகம் அதன் துணை பகுதிகளாக ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு, தொல் பழங்காலம், அகழாய்வு, கல்வெட்டு, வழிபாட்டுத் தலம், சிற்பம், நாணயம், செப்பேடு, வரலாற்றுச் சின்னம், ஓவியம் என்றும் பல பிரிவுகளில் விளக்கப்பட்டு உள்ளன.[2]
2017 ஒக்ரோபரில் இந்தத் தளத்தில் 8115 நூல்கள், 888 பருவ வெளியீடுகள், 21 சுவடிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பல்லூடக வளங்கள் உள்ளன.[3]
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ https://www.dinakaran.com/tamilnadu_news/tamil_enthusiasts_treasure_tamil_elibrary/
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/1316659-tamil-e-library-crosses-10-crore-hit-views-record.html
- ↑ https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/Mar/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3112547.html