ஆழ்நீர் தாவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க மூழ்காளர் பயிற்சி மதிப்பீட்டிற்காக நீரில் குதித்தல்
வார்சாவாவிலுள்ள நீர்மூழ்கு அருங்காட்சியகம்
முறைசாரா பொழுதுபோக்கு நீர்தாவல் கொடி

ஆழ்நீர் தாவுதல் அல்லது ஆழ்நீர் மூழ்குதல் (Underwater diving) என்பது நீரினடியே செல்லும் முறையாகும்; இதனை மூச்சுவிடும் கருவிகளுடனோ (இசுகூபா மூழ்கல் மற்றும் தரையிலிருந்து வழங்கப்பட்ட மூழ்கல்) அல்லது மூச்சடக்கியோ (எளிய நீர்ப்பாயல்) செய்யலாம். ஆழ்நீர் பரப்பில் காணப்படும் அழுத்தத்திலிருந்து தனிப்படுத்த வளிமண்டல மூழ்குடைகள் பயன்படுத்தபடலாம். அல்லது நிரம்ப ஆழங்களுக்குச் செல்கையில் ஏற்படும் அமுக்கநீக்க நோய்மை தீவாய்ப்புகளைத் தவிர்க்க நிரம்பல் மூழ்கல் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலான மூழ்கல் செயற்பாடுகள் குறைந்த ஆழத்திலேயே நடக்கின்றன; கவசம்தாங்கிய வளிமண்டல மூழ்குடைகள் கூட மிகுந்த ஆழங்களில் நீரின் அழுத்தத்தை தாங்கவியலாது உள்ளன. தவிரவும் மிகவும் பாதுகாப்பான சூழல்களில் மட்டுமே மூழ்குதல் செயல்படுத்தப்படுகிறது. எந்தளவு பாதுகாப்பான சூழல் தேவை என்பது ஒவ்வொரு மூழ்காளருக்கும் மாறுபடும். அபூர்வமாக நீரல்லாத நீர்மங்களில் மூழ்க வேண்டியத் தேவை ஏற்படுகின்றது.

ஆழ்கடல் மூழ்குதல் என்பது ஆழ்நீர் தாவுதலின் ஓர் வகையாகும். வழமையாக தரையிலிருந்து வழங்கு கருவியுடன் சீர்தரப்படுத்தப்பட்ட சீருடையுடன் வழமையான செப்பு தலைக்கவசத்துடன் கடலின் ஆழத்திற்கு மூழ்குவர்.

பொழுதுபோக்கு மூழ்குதல் என்பது மனமகிழ்விற்காக நிகழ்த்தப்படுவதாகும்.

மேலும் பார்க்க[தொகு]

இசுகூபா மூழ்கல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்நீர்_தாவுதல்&oldid=3679497" இருந்து மீள்விக்கப்பட்டது