ஆளும் பல்லக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகனம்
உரிய கடவுள்: திருமால், சிவபெருமான்

ஆளும் பல்லக்கு என்பது இந்து சமய கோயில்களில் உற்சவர் வீதியுலா செல்லும் பல்லக்கு ஆகும்.

ஆளும் பல்லக்கு திருமால் மற்றும் சிவாலயங்களில் பயன்பாட்டில் உள்ளது. [1]

ஆளும் பல்லக்கு அமைப்பு[தொகு]

பல்லக்கின் முன்புறத்தில் இருவர் தண்டினை சுமப்பது போலவும், பின்புறத்தில் இருவர் பல்லக்கின் தண்டினை சுமப்பது போலவும் உள்ளது. சுமப்பவர்களின் சிலைகள் அக்கால மனிதர்களைப் போல உடை அணிந்துள்ளனர். [1]

பல்லக்கின் மத்தியில் அழகிய வேலைப்பாடுகளுடன் உற்சவ மூர்த்தியை வைக்கும் அமைப்பு உள்ளது.

கோவில்களில்[தொகு]

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோவில்
  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்
  • நாங்குநேரி பெருமாள் கோவில்
  • திருவரங்கம் அரங்கநாதர் கோயில் [2]

இவற்றையும் காண்க[தொகு]

அதிகார நந்தி வாகனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 78 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
  2. "ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழாவில்ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா". Dinamani.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளும்_பல்லக்கு&oldid=3711915" இலிருந்து மீள்விக்கப்பட்டது