உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளுநர் இல்லம், ராஞ்சி

ஆள்கூறுகள்: 23°22′53″N 85°19′03″E / 23.381297°N 85.317533°E / 23.381297; 85.317533
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Raj Bhavan (Jharkhand)
Map
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று23°22′53″N 85°19′03″E / 23.381297°N 85.317533°E / 23.381297; 85.317533
உரிமையாளர்சார்க்கண்டு அரசு
மேற்கோள்கள்
Website

ஆளுநர் இல்லம், ராஞ்சி (Raj Bhavan, Ranchi) என்பது ஜார்கண்ட் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது சார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் அமைந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ரமேஷ் பைஸ் இங்கு வசித்து வருகின்றார்.[1]

கட்டிடம்

[தொகு]

ஆளுநர் இல்லம் 62 ஏக்கர்கள் (250,000 m2) பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 1930-ல் தொடங்கப்பட்டு மார்ச் 1931-ல் நிறைவடைந்தது. அன்றைய இத்திட்ட மதிப்பு ரூ. 700,000 ஆகும். இக்கட்டிடத்தினை கட்டிடப்பொறியாளர் சேட்லோ பெல்லார்டு என்பவர் வடிவமைத்தார்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆட்ரி இல்லம் உள்ளது. இது இப்போது ஆளுநர் செயலகமாக உள்ளது. இது 1850 முதல் 1856 வரை சோட்டா நாக்பூரின் துணை ஆணையராக இருந்த படைத்தலைவன் ஹன்னிங்டனால் கட்டப்பட்டது.[2]

தோட்டங்கள்

[தொகு]

ஆளுநர் மாளிகையில், பல புல்வெளிகள் மற்றும் தோட்டங்கள் உள்ளன.[3] இவை குறிப்பிடப்பட்ட ஆளுமைகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

  • அக்பர் தோட்டம் 2005-ல் புதிதாக உருவாக்கப்பட்டது மற்றும் உரோசாக்கள் மற்றும் பருவகால மலர்களின் அழகான பகுதி இங்கு உள்ளது.
  • புத்தர் தோட்டம். அழகிய நிலப்பரப்பையும் பசுமை இல்லத்தினையும் கொண்டுள்ளது.
  • அசோகா தோட்டம். இதன் முக்கிய ஈர்ப்பாகப் புல்வெளி தோராயமாக 52,000 sq ft (4,800 m2) பரப்பளவில் அமைந்துள்ளது
  • மூர்த்தி தோட்டம். 15,000 சதுர அடை பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் 12000 சதுர அடி 'அல்லிக் குளம்' அமைந்துள்ளது .
  • மகாத்மா காந்தி தோட்டம். ஆளுநர் மாளிகையின் தெற்கு பகுதியில் மருத்துவ தாவரங்களுடன் இத்தோட்டம் அழகிய நீரூற்றின் நடுவே அமைந்துள்ளது.
  • நட்சத்திர வனம். இது புதிய தோட்டம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://rajbhavanjharkhand.nic.in/
  2. ":: RMC ::". www.ranchimunicipal.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  3. "Jharkhand: Raj Bhavan garden reopens for public". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநர்_இல்லம்,_ராஞ்சி&oldid=3991184" இலிருந்து மீள்விக்கப்பட்டது