ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாதாரண மூளையில் பக்க மடிப்பு (சில்வியன் பிளவு). ஐன்ஸ்டீனின் மூளையில் இது துண்டிக்கப்பட்டது போல் இருந்தது

இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையானது ஆய்வுகளுக்கும் ஐயங்களுக்கும் உரிய ஒரு பொருளாக இருந்து வருகின்றது. இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிகமான அறிவே இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும்.

ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் தெரிவித்தன.[1]

மூளை பற்றிய ஆய்வுகள்[தொகு]

1955இல் ஐன்ஸ்டீனின் இறப்புக்குப் பின்னர் பிரேதப்பரிசோதனையின் போது நீக்கப்பட்ட அவரின் மூளையானது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப் பட்டு பின்பு, நோயியல் மருத்துவரான தாமஸ் ஸ்டோல்ட்ஸ் ஹார்வியால் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அதனை அறுத்துத் தன்ன்னிடம் சில துண்டுகளை வைத்துக்கொண்டு ஏனையவற்றை மற்ற முன்னணி நோயியல் மருத்துவர்களிடம் வழங்கினார்.

உசாத்துணை[தொகு]

  1. Fields, R. Douglas (2009). The Other Brain: From Dementia to Schizophrenia. New York: Simon & Schuster. p. 7. ISBN 978-0-7432-9141-5

வெளி இணைப்புக்கள்[தொகு]