ஆல்ஃபா செண்ட்டாரி பிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓவியரின் கைவண்ணத்தில் ஆல்ஃபா செண்ட்டாரி பிபி

ஆல்ஃபா செண்ட்டாரி பிபி (Alpha Centauri Bb) என்பது செண்டாரசு என்ற தெற்கு விண்மீன்குழுவில் ஏறத்தாழ 4.37 ஒளியாண்டு தூரத்தில் உள்ள உள்ள ஆல்ஃபா செண்ட்டாரி பி என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கே-வகைப் புறக்கோள் ஆகும்.[1] ஐரோப்பிய வானியலாளர் குழு ஒன்று[2][3] இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக 2012 அக்டோபர் 16 ஆம் நாள் அன்று அறிவித்துள்ளது.[4][5] பூமியைப் போன்ற எடையும், புதன் கோள் நமது சூரியனைச் சுற்றி வரும் தூரத்துக்குக் குறைவான தூரத்தில் (0.04 வாஅ) அதன் சூரியனைச் சுற்றியும் வருகிறது. இதனால் அது "வாழத்தகுந்த வலயத்துக்கு" வெளியே இது அமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது தனது சூரியனை 3.236 நாட்களுக்கு ஒரு தடவை சுற்றி வருகிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,200 செல்சியசு ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]