ஆலோகா பௌத்த மையம்
ஆலோகா பௌத்த மையம் (Aaloka Buddhist Center) சிங்கப்பூரில் உள்ள இலங்கை பெளத்த மையம் ஆகும். இம்மையம் தற்போது சிங்கப்பூரில் 11 லொராங் 22 கெலாங் பகுதியில் அமைந்துள்ளது.
ஆலோகா பெளத்த மையம் சிங்கப்பூரில் ஒரு தெராவாடின் புத்த பௌதிக நிலையமாக நிறுவப்பட்டது. வென் டாக்டர் கோட்டாவிலா சிறீ பெமலோகா தெரா என்பவரால் நிறுவப்பட்டது. இவர் லங்காசுடர் பல்கலைக்கழகத்தில் மத ஆய்வில் இளங்கலை பட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். என் பயணம், பண்டைய மகா விகார பாரம்பரியம், பௌத்த தியானம் மற்றும் புத்தமத குழந்தை போன்ற பல நூல்களையும் இவர் வெளியிட்டார் [1]. பெளத்த சேவைகள், காதினா திருவிழா, ஞாயிறு தர்மா வகுப்புகள் மற்றும் சுத்த மந்திரம் ஆகியவை இவருடைய அன்றாட நிகழ்வுகளில் அடங்கும் [2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ven.Dr. Kotawila Sri Pemaloka Thero". LinkedIn Corporation. 30 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Aaloka Buddhist Center (Singapore)". 6 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 September 2014 அன்று பார்க்கப்பட்டது.