ஆலேன்பிரிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலேன்பிங்கைட்டுAllanpringite
Allanpringite-122708.jpg
படத்தின் அகலம் 4 மி.மீ
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிம்ம்
வேதி வாய்பாடுFe3+3(PO4)2(OH)3•5H2O
இனங்காணல்
மோலார் நிறை498.07 கி/மோல்
நிறம்வெளிர்பழுப்பு மஞ்சள்
படிக இயல்புஊசிவடிவம்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிளப்பு{hk0} சரியானது {010} நன்று
முறிவுஒழுங்கற்றது/சமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெளிர் மஞ்சளும் வெண்மையும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் முதல் ஒளிகசியும் வரை
ஒப்படர்த்தி2.54 (அளக்கப்பட்டது), 2.583 (கணக்கிடப்பட்டது.)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.662
nβ = 1.675
nγ = 1.747
இரட்டை ஒளிவிலகல்0.085
2V கோணம்48° (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2]

ஆலேன்பிரிங்கைட்டு (Allanpringite) என்பது Fe3+3(PO4)2(OH)3•5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பாசுபேட்டு வகை கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. ஆத்திரேலியாவைச் சேர்ந்த தெற்கு ஆத்திரேலிய அருங்காட்சியகத்தின் கனிமவியலாளர் ஆலேன் பிரிங்கு என்பவர் கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அலுமினியம் பாசுபேட்டு கனிமமான வேவெலைட்டு என்னும் கனிமத்தின் வரிசையொத்த Fe3+ பாசுபேட்டு கனிமம் ஆலேன்பிரிங்கைட்டு ஆகும். ஆனால் இது வேறுபட்ட படிகச் சீர்மையைக் கொண்டுள்ளது. வேவெலைட்டு கனிமம் நேர்சாய்சதுரப் படிகச்சீர்மையை கொண்டுள்ளது ஆனால் ஆலேன்பிரிங்கைட்டு ஒற்றை சரிவச்சு படிகச் சீர்மையைக் கொண்டுள்ளது. ஊசி வடிவப் படிகங்களாக, எப்போதும் இரண்டு மில்லிமீட்டர் நீளமுள்ள இரட்டைகளாகவும் இணை கட்டுகளாகவும் உருவாகிறது. கைவிடப்பட்ட இரும்பு சுரங்கங்களில் ஆலேன்பிரிங்கைட்டு மற்ற இரும்பு பாசுபேட்டுகளுடன் இணைந்து காணப்படுகிறது[1][3] .

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Allanpringite. Mindat
  2. Allanpringite. Webmineral
  3. Kolitsch, U., Bernhardt, H.J., Lengauer, C.L., Blass, G., and Tillmanns, E., 2006. Allanpringite, Fe3(PO4)2(OH)3·5H2O, a new ferric iron phosphate from Germany, and its close relation to wavellite. European Journal of Mineralogy 18, 793-801
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலேன்பிரிங்கைட்டு&oldid=2626170" இருந்து மீள்விக்கப்பட்டது