ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (பிறப்பு: ஜூன் 1, 1942) தமிழகக் கவிஞர். இவர் சென்னை ஆலந்தூரில் பிறந்தார். இவரின் தந்தை ம. கோபால் மற்றும் தாயார் கோ. மீனாம்பாள் ஆவார்கள்.

ஆலந்தூர் மோகனரங்கன் கவிஞர் என்ற முறையில் தமிழ் உலகுக்கு அறிமுகமானவர். மரபுக் கவிதைகள் [1] கவிதை நாடகம் [2] நாவல் [3] சிறுகதைகள் [4] எனப் பல்வேறு கோணங்களில் நூல்கள் எழுதியுள்ளார்.

காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.

‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில் இவர் மு. வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.

எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார்.

Mohanarangan.jpg

நூலகத்தால் உயர்ந்தேன் என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களை இவர் குறிப்பிட்டுள்ளார். [5]

அடிக்குறிப்பு[தொகு]

  • கவிதைகள் தொகுப்பு 1, 2, 3, 4,
  • மெல்லிசைப் பாடல்கள் பிறர் வாழப் பிறந்தவர்கள்,
  • கவிதை நாடகங்கள்,
  • சிறுவர் கவிதைகள்,
  • பள்ளிப் பறவைகள்,
  • அழகிய தமிழில் எழுதுங்கள்,
  • வண்ணத்தமிழ்,
  • குழந்தை இலக்கியம்,
  • பொய்யே நீ போய்விடு
  • நினைத்தால் இனிப்பவளே,
  • இளைய தலைமுறை எழுந்து நிற்கட்டும்,
  • அன்னையர் குலமே உனக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,
  • இதயமே இல்லாதவர்கள்,
  • வாழ்வதற்கு மனிதர்கள் தேவை,
  • இளைஞர்களுக்கு ஒர் எச்சரிக்கை
  • உரைநடை நாடகம்,
  • எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்,
  • ஏமாந்தவர் யார்,
  • சவால் சம்பந்தம்,
  • சேமிப்பு வாழ்க்கையில் தித்திப்பு,
  • நாட்டுப்பற்று,
  • மனித உயிருக்கு மரியாதை இல்லை
 1. ஆலந்தூர் கோ. மோகனரங்கன், நூலகத்தால் உயர்ந்தேன், வசந்தா பதிப்பக வெளியீடு, 2017-18