ஆர்.டி-180
ஆர்.டி-180 (РД-180, Ракетный Двигатель-180, Rocket Engine-180) என்பது செலுத்து வாகனங்களில் (Rocket) பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும். இது இரட்டை எரிபொருள் எரியறையும் (dual-combustion chamber) இரட்டை நுனிக் குழலையும் (dual-nozzle) கொண்டதாகும். இந்த இயந்திரம் ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகின்றன. அமெரிக்காவின் அட்லஸ் வி செலுத்து வாகனத்தின் முதல் நிலையில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. எனர்ஜியா செலுத்துவாகனங்களில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி-170/ஆர்.டி-171 இயந்திரங்களின் நீட்சியாக இவ்வியந்திரம் தயாரிக்கப்பட்டது.
ரஷ்யாவின் தடை அறிவிப்பு
[தொகு]ரஷ்ய-உக்ரேனியப் பிரச்சனையின் தொடர்பான அமெரிக்காவின் நிலைபாட்டிற்கு எதிராக இத்தகைய ஆர்.டி-180 இயந்திரங்களை அமெரிக்கா தனது ராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ரஷ்யா அமெரிக்காவிற்கு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 13 தியதி தடை விதித்துள்ளது. இந்தத் தடையின் மூலம் அமெரிக்காவின் வானியல் திட்டங்கள் பாதிக்கப்படும்.[1]