ஆர்சன்யுரேனோசுபாதைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்சன்யுரேனோசுபாதைட்டு

ஆர்சன்யுரேனோசுபாதைட்டு (Arsenuranospathite) என்பது Al(UO2)2(AsO4)2F•20H2O.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் யுரேனோசுபாதைட்டு கனிமத்தின் [2] was first used by Walenta (1963)[3] ஆர்சனேட்டு ஒப்புமை என்பதால் ஆர்சன்யுரேனோசுபாதைட்டு என்ற பெயரைப் பெற்றது. முதன்முதலில் 1963 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிளாக் பாரெசுட்டு மலைத்தொடரில் கிடைத்த யுரேனைல் ஆர்சனேட்டு கனிமத்தின் அடிப்படையில் வாலெண்ட்டா என்பவர் இப்பெயரைப் பயன்படுத்தினார்.

பிற்காலத்தில் ஆர்சன்யுரேனோசுபாதைட்டு பெயர் சந்தேகத்திற்கு இடமின்றி குறைந்தபட்சம் இரண்டு வெவ்வேறு கனிம இன்ங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. முறையான செஞ்சாய்சதுர ஆர்சன்யுரேனோசுபாதைட்டு (Al(UO2)2(AsO4)2F•20H2O) என்பது முதலாவது இனமாகும். பகுதியளவு நீர் நீக்கமடைந்த போலி நாற்கோணக அல்லது நாற்கோணக ஆர்சன்யுரேனோசுபாதைட்டு (Al(UO2)2(AsO4)2F•nH2O) (n = 8–10) என்பது இரண்டாவது வகையாகும்.

பண்புகள்[தொகு]

மஞ்சள் முதல் மஞ்சள்-பச்சை நிறத்தை இக்கனிமம் கொண்டுள்ளது. ஒளிபுகும் முதல் ஒளிபுகாவரையிலான தன்மையும் கொண்டு கதிரியக்கத்தன்மையுடன் பட்டகத்தன்மையைப் பெற்றுள்ளது. கடினத்தன்மை அளவு கோலில் ∼2 என்ற மதிப்பை வெளிப்படுத்துகிறது. [4]

வேதி இயைபு[தொகு]

ஆர்சன்யுரேனோசுபாதைட்டு கனிமத்தில் அலுமினியமும் யுரேனியமும் நிலையாக இடம்பெற்றுள்ளன. ஆர்சனிக்கு, பாசுபரசு மற்றும் புளோரின் ஆகிய தனிமங்களின் விகிதங்களில் முக்கியமான மாறுபாடுகள் காணப்படுகின்றன.

இருப்பிடம்[தொகு]

சோபியா சுரங்கம், புக்கெல்சுபாக் பள்ளத்தாக்கு, விட்டிச்சென், செங்கென்செல், பிளாக் பாரசுட்டு, பேடன்- ஊர்டெம்பெர்கு முதலான செருமன் பகுதிகளில் ஆர்சன்யுரேனோசுபாதைட்டு கிடைக்கிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]