ஆர்க்கிகாட்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆர்க்கிகாட் (ArchiCAD) என்பது ஒரு கட்டிடக்கலை சார்பான கட்டிடத் தகவல் மாதிரியாக்கக் கணினி உதவு வடிவமைப்பு மென்பொருள் ஆகும். மக்கின்டோசு, வின்டோசு ஆகிய இயங்கு தளங்களில் செயல்படக்கூடிய இது அங்கேரி நாட்டைச் சேர்ந்த கிராபிசாஃப்ட் என்னும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
தொடக்க ஆப்பிள் மக்கின்டோசில் இயங்குவதற்காக இதனை உருவாக்கும் வேலைகள் 1982 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தனியாள் கணினிகளில் முப்பரிமாண வரைபடங்களை வரையப் பயன்படுத்தக்கூடிய முதல் கணினி உதவு வடிவமைப்பு மென்பொருள் "ஆர்க்கிக்காட்"டே எனக் கருதப்படுகிறது. இன்று இம் மொன்பொருளை 100,000 க்கும் மேற்பட்ட கட்டிடக்கலைஞர்கள் தமது கட்டிட வடிவமைப்பு வேலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.