ஆய் ஆண்டிரன்
ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.
கொடைத்திறம்[தொகு]
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
- நிழல்திகழ்
- நீலநாகம் நல்கிய கலிங்கம்
- ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
- சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
- ஆர்வ நன்மொழி ஆயும்
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.[1].இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்.இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.[2].
உசாத்துணை[தொகு]
- ↑ "Sangam tamilkings". 2012-11-30 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2012-11-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tamil wikipedia